ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

மருந்து பங்குகளில் கவனத்துடன் முதலீடு செய்க..

நேற்று முன்தினம் (April 11) அன்று ஏப்ரல் மாத போர்ட்போலியோ நண்பர்களிடம் பகிரப்பட்டது.


அந்த போர்ட்போலியோவை தயார் செய்யும் போது உணர்ந்ததை இங்கு பகிர்கிறோம்.

இந்திய மருந்து நிறுவனங்களை பொறுத்த வரை உள்நாட்டு விற்பனையை விட வெளிநாட்டு ஏற்றுமதி தான் முக்கிய பங்கு வகிக்கிறது.பல திரைப்படங்கள் பார்த்தவாறு, மருந்து கண்டுபிடிப்பிற்காக எதையும்(?) இங்கு எளிதாக ஆய்வு செய்யலாம், தேவையான நிபுனனர்கள் குறைந்த ஊதியத்தில் கிடைக்கிறார்கள் என்று பல சாதகமான விடயங்கள் இங்கு உள்ளன.

இதனால் இங்கு உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பரவலாகவே உள்ளது. அதிலும் லாபம் கிடைக்கும் ஒன்றாகவும் உள்ளது.

கிட்டத்தட்ட மென்பொருள் நிறுவனங்களை போல் இந்திய மருந்து நிறுவனங்களும் உலக சந்தையில் முக்கிய இடத்தில் தான் உள்ளன. ஆனால் ஐடி நிறுவனங்கள் அளவு வெளியே தெரிவதி\ல்லை.

அதிலும் இந்த ஏற்றுமதி அமெரிக்காவை சார்ந்தே அதிகமாக இயங்குகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் நடந்த சில  நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த வாரம் USFDA regulatory என்று சொல்லப்படும் அமெரிக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் பல புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

USFDA: US Food and Drug Administration

இவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட மருந்துகளில் அதிக அளவு இந்திய மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளும் உள்ளடக்கம்.

Dr.Reddy, Sun Pharma, Auronbinda என்று பல முக்கிய நிறுவனங்களின் மருந்துகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால் கடந்த வாரத்தில் மட்டும் இவை 10% க்கும் மேல் உயர்வை கொடுத்துள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது.

மருந்து ஒப்புதல்களுக்காகவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் கூடியுள்ளது. ஆனால் இந்த ஒப்புதல்களால் எதிர்பார்க்கப்படும் லாபம் மற்றும் விற்பனை இனி வரும் காலங்களிலே எதிரொலிக்கும்.

அதனால் Forward P/E மதிப்பீடலில் ஒரு வருடத்திற்கும் அதிகமாகவே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போதைய மருந்து பங்குகளின் விலைகள் மதிப்பீடலை விட அதிகமாகவே உள்ளது.

இந்த விலைகளில் வாங்கினால் எதிர்பார்த்த லாபங்களை அடைவது கடினம். காத்திருந்து கரெக்சனில் வாங்குவது தான் அதிக பலனைத் தரும்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக