புதன், 29 ஏப்ரல், 2015

சர்க்கரைக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டு சுகர் நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு மத்திய அரசு சர்க்கரைக்கான இறக்குமதி வரியைக் கூட்டி உள்ளது.


கரும்பு விவசாயம் படுத்த நிலையில் இருப்பதால் அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

கடந்த வருடத்தில் பெட்ரோலுடன் 15% அளவு எத்தனாலை கலக்கலாம் என்று அரசு அனுமதி அளித்தது.இதனால் எத்தனால் தயாரிக்க தேவையான சர்க்கரையின் தேவை அதிகரித்து சுகர் நிறுவனங்கள் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் அந்த அளவு பயன் தெரியவில்லை.

இதற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3.5 மில்லியன் டன் சர்க்கரை தேவைக்கும் அதிகமாக இருந்தது ஒரு காரணமாக அமைந்தது.

இதனால் சர்க்கரை விலை பெரிதளவு ஏற்றம் காணவில்லை.

தற்போது இறக்குமதி செய்யும் சர்க்கரைக்கான வரியை 25% என்பதில் இருந்து 40% என்று கூட்டி உள்ளது. சர்க்கரை இறக்குமதியின் வேகம் இதனால் தடை படலாம்.

இதனால் உள்நாட்டில் சர்க்கரை விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை சுகர் நிறுவனங்களுக்கு நீண்ட கால நோக்கில் சாதகமான விடயமாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும் சுகர் நிறுவனங்களிடம் இருக்கும் அதிக அளவிலான கடன் லாபத்தை கடுமையாக பாதிக்கிறது. அதனை அவர்கள் தான் மீட்க வேண்டும்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக