வியாழன், 9 ஏப்ரல், 2015

அடுத்த டீல்: ஸ்னேப்டீல் ப்ரீசார்ஜை வாங்கியது

ஒரு படத்தில் கவுண்டமணி பஞ்சுமுட்டாய், புண்ணாக்கு விற்கிறவன் எல்லாம் தொழிலதிபர் தான் என்று சொல்கிறான் என்பார் .


இப்பொழுது ஆன்லைன் வர்த்தகத்தில் நடக்கும் டீல்களை பார்த்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

இனி பஞ்சுமுட்டாய், புண்ணாக்கு போன்றவற்றை ஆன்லைனில் விற்றால் கூட பல கோடிகளுக்கு அதிபராய் விடலாம் போல. அதனால் எதையும் குறைத்து மதிப்பிட வழி இல்லை.



Freecharge.in என்ற தளம் நான்கு வருடங்களுக்கு முன்பு தான் ஆரம்பிக்கப்பட்டது.

நமது மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

உண்மையில் சொன்னால், ஆரம்பத்தில் எவரோ விளையாட்டாக ஆரம்பித்து இருப்பார்கள் என்று தான் நினைக்க தோன்றியது. அவ்வளவு எளிமையாக தான் தளம் இருந்தது.


இன்று ஸ்னேப்டீல் தளம் ப்ரீசார்ஜை 600 கோடி ரூபாய் கொடுத்து  வாங்கியுள்ளது என்று கூறினால் நம்ப முடியுதா?

இந்த விலை அந்த தளத்திற்கு மட்டும் அல்ல. தளம் சிம்பிளாக தான் உள்ளது. அவர்களிடம் உள்ள 20 மில்லியன் பயனாளிகளுக்கு தான் இவ்வளவு விலை கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள எளிதான ஐடியாக்களை கூட விட்டு விடாதீர்கள். இணைய தளம் போன்ற எளிதான முதலீட்டில் அதிக பயனாளிகளை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் பயன்படலாம்.

இப்பொழுது எல்லாம் பெரிய நிறுவனங்கள் ஏஜெண்ட் வைத்து நேரில் சென்று ஆள் பிடிக்க விரும்புவதில்லை.

யார் ஏற்கனவே அதிக வாடிக்கையாளார்களை வைத்து இருக்கிறார்களோ அவர்களை லபக்கென்று கவ்விக் கொள்கிறார்கள்.

அதிக ஆட்கள் கொண்ட ஜாதி சங்கத்தில் உள்ளவர்கள் லம்பாக காசை வாங்கி கொண்டு அரசியல் கட்சியில் சேர்வது போல் தான் இணைய தளங்களை விற்று செல்லும் டீல்கள் தொடர்கின்றன.

கடந்த வருடம் பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா? என்று ஒரு பதிவு எழுதி இருந்தோம்.

அதில் திருநெல்வேலி அல்வா, காஞ்சி பட்டு, தஞ்சாவூர் பொம்மை, சேலம் மாம்பழம், சிவகாசி பட்டாசு போன்ற புவியியல் சார்ந்த பொருட்களை ஆன்லைனில் விற்பது பற்றி கூறி இருந்தோம்.

அதனை சில நண்பர்கள் செயலாக்கத்தில் செய்து உள்ளார்கள்.

இந்த தளத்தில் கோவில்பட்டி கடலைமிட்டாய் முதல் திருநெல்வேலி அல்வா வரை பல தமிழ் பண்டங்கள் ஆன்லைனில் கிடைக்கிறது.

Nativespecial.com


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக