புதன், 22 ஏப்ரல், 2015

தொடர்ந்து வீழ்ச்சி அடையும் ஐடி பங்குகள்

கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டு நிதி அறிக்கைகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.




இதில் முன்னெப்போதும் இல்லாத அளவு மென்பொருள் பங்குகள் மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐடி பங்குகளை குறிப்பிடும் குறியீடு மூன்று மாதங்களில் இல்லாத அளவு வீழ்ந்துள்ளது.

இதற்கு ஐடி நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவு நிதி அறிக்கைகளை கொடுக்காததும் ஒரு காரணம்.

TCS தான் முதலில் வீழ்ச்சியை ஆரம்பித்தது. முன்னேற்றத்திற்கான அறிகுறியும் பெரிய அளவில் தென்படவில்லை.

பார்க்க:
சொல்லிக் கொள்ளும்படி இல்லாத TCS லாப அறிக்கை

அதனை தொடர்ந்து HCL நிறுவனமும் எதிர்மறை வளர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அதிக அளவில் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது சாதகமான விடயம்.

நேற்று வந்த விப்ரோ அறிக்கையும் பரவாயில்லை என்பது போன்ற அறிக்கை தான்.

Persistent Systems நிதி அறிக்கை ஓரளவு வளர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அடுத்து இன்போசிஸ் அறிக்கை ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.

யூரோ நாணயம் பெரியளவில் வீழ்ந்தது தான் ஐடி கம்பெனிகள் காரணமாக கூறுகின்றன. அதையும் தாண்டி வருமானத்தில் பெருமளவு மாற்றத்தைக் காண முடியவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம்.

நல்ல ஐடி பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் தருணம். இந்த சமயத்தில் தான் இன்போசிஸ் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனாலும் அவர்கள் வளர்ச்சியை பார்த்த பிறகு தான் ஏதும் சொல்ல முடியும் நிலை.

அது வரை காத்திருப்போம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: