வியாழன், 9 ஏப்ரல், 2015

சத்யம் ராஜிவிற்கு ஏழு வருட சிறை தண்டனை

சத்யம் நிறுவனத்தில் மீதான பங்குச்சந்தை மோசடிகள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று வெளிவந்தது.


2008ல் நடந்த மோசடிக்கு கிட்டத்தட்ட 7 வருடங்கள் கால தாமதமாக தீர்ப்பு வந்துள்ளது

இந்திய நீதிமன்ற வரலாற்றைப் பொறுத்த வரை இந்த தாமதம் என்பது தாமதமல்ல. அதனால் விரைவு என்றே கருத வேண்டும். தகுந்த ஆதாரங்களுடன் வழக்கிற்கு உதவிய செபியையும் பாராட்ட வேண்டும்.



தீர்ப்பில் ராமலிங்க ராஜுவிற்கு ஏழு வருட சிறைத் தண்டனையும், 5 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி பல பேரின் உயிர்களுடன் தொடர்புடையது என்பது வேதனையான விடயம். பல சிறு முதலீட்டாளர்கள் 95% அளவு இந்த பங்கில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டனர்.

அதனால் இந்த தண்டனை என்பது குறைவான ஒன்று தான்.

இந்த சமயத்தில் சத்யம் ஊழல் என்றால் என்ன என்பதை புதிய முதலீட்டாளர்கள் அறிய வாய்ப்பு இல்லை.

அதனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் முன்பு விரிவாக எழுதிய கட்டுரையை பார்க்கவும். இணைப்பு கீழே உள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்த சத்யம் ஊழல்

சுருக்கமாக சொல்வதாக இருந்தால், தேவையில்லாத பேராசை நல்ல புகழுடன் இருந்த மனிதனை சிறை வரை இழுத்து வந்து விட்டது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக