செவ்வாய், 14 ஏப்ரல், 2015

VRL Logistics IPOவை வாங்கலாமா?

நாளை VRL Logistics என்ற நிறுவனம் IPO மூலம் சந்தைக்குள் வரவிருக்கிறது.


பார்சல் டெலிவரி போன்ற சரக்கு போக்குவரத்து துறையில் இருக்கும் இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது.38 வருடங்களுக்கு மேல் இந்த துறையில் இயங்கி வருகிறது. இது போக, பயணிகள் பேருந்து சேவையும் கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் கட்டமைக்கப்பட்ட மென்பொருள்கள் மூலமாக நன்கு இணைக்கப்பட்டு உள்ளது.

தங்களுக்கு தேவையான வாகனங்களை பெறுவதற்கு அசோக் லேய்லேன்ட் போன்ற பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து உள்ளது.

அதே போல் வாகனங்களை தமது வசதிக்கு ஏற்றவாறு மாற்றும் வசதிகளையும் கொண்டுள்ளது.

நீண்ட அனுபவம் காரணமாக லாஜிஸ்டிக்ஸ் துறையில் முதன்மை நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது.

மேலும் வியாபாரத்தை விரிவாக்குவதற்கும், சில கடன்களை அடைப்பதற்காகவும் சந்தைக்கு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக வருமானம் 18% என்ற அளவில் சராசரி வளர்ச்சி அடைந்து உள்ளது. இந்த வருட லாப விகிதத்தின் படி, EPS மதிப்பு 10.44 என்று வருகிறது.

அதிகபட்ச நிர்ணயிக்கப்பட்ட பங்கு விலையான 205 ரூபாயில் பார்த்தாலும் P/E விகிதம் 19 என்ற அளவில் உள்ளது.

இது இதே துறையில் சந்தையில் உள்ள Bluedart,Gati போன்ற நிறுவனங்களின் பங்குகளை விட குறைவாகவே உள்ளது. அதனால் IPO மலிவான விலையிலே உள்ளது.

இந்த காரணங்களால் VRL IPOவை வாங்குவதற்கு பரிந்துரை செய்கிறோம்.

இந்தியாவில் அடுத்த சில வருடங்களில் ஏற்றம் காணும் துறையாகவும் லாஜிஸ்டிக்ஸ் பார்க்கப்படுகிறது. அதனால் நீண்ட கால நோக்கிலும் வைத்துக் கொள்ளலாம்.

துவக்க நாள்: 15-Apr-15
முடிவுறும் நாள்: 17-Apr-15
IPO பங்கு விலை: Rs 195.00-205.00
குறைந்தபட்சம்: 65 Shares

நீண்ட கால நோக்கில் இந்த பங்கினை வைத்துக் கொள்பவர்கள் ஒவ்வொரு காலாண்டு முடிவுகளையும் கூர்ந்து கவனித்து வருவது அவசியம்.

இந்த நிறுவனம் அதிக அளவில் ஏஜென்சிகளை சார்ந்து இருப்பது ஒரு பாதகமான விடயம். அதே போல் இந்த துறையில் இருக்கும் கடுமையான போட்டியையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. எரிபொருள் விலை மீண்டும் உயரும் போது லாபத்தை பாதிக்கலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: