புதன், 8 ஏப்ரல், 2015

ரிசர்வ் வங்கி முடிவால் ஏமாற்றமடைந்த சந்தை

நேற்று ரிசர்வ் வங்கியில் வட்டிக் குறைப்புகள் தொடர்பான முடிவுகள் எடுக்கும் தினம்.


அதனால் சந்தையில் கருத்துக் கணிப்புகள் கூட நடந்தது. பாதி பேர் குறைப்பார்கள் என்றும் மீதி பாதி குறைக்க மாட்டார்கள் என்றும் சொல்லி இருந்தார்கள்.

இதனால் அரைகுறை மனதுடன் தான் சந்தை இருந்தது.இது போக மழை எதிர்பாராது பெய்த பல இடங்களில் பயிர்களை நாசம் செய்தது. இதனால் உணவு, தானியங்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டு பணவீக்கம் கூடி விடும் என்ற ஒரு அச்சம் இருந்து வந்தது.

இந்த அச்சம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வந்ததை ரகுராம் ராஜன் பேட்டியில் அறிய முடிகிறது. இதனால் வட்டி குறைப்புகள் ஏதும் செய்யாமல் விட்டு விட்டார்.

ஏற்கனவே இந்த வருடம் இரு முறை வட்டி குறைக்கப்பட்டுள்ளது.  ஆனால் வங்கிகள் அந்த அளவிற்கு வட்டியைக் குறைக்கவில்லை என்பது வேடிக்கை. இதனால் வட்டிக் குறைப்பின் பலன் முழுமையாக மக்களை சென்றடைய வில்லை என்பது தான் உண்மை.

இதனால் ராஜன் வட்டியைக் குறையுங்கள் என்று சும்மா கூவிக் கொண்டு இருக்காமல் நீங்கள் வட்டியைக் குறையுங்கள் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதன் பலனாக நேற்று SBI, ICICI, HDFC போன்ற வங்கிகள் வட்டியைக் குறைத்து விட்டன என்பது குறிப்பிட்டத்தக்கது.

ஒரு முதலீட்டாளனாக வட்டி குறைப்பது நமக்கு குறுகிய காலத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால் பொருளாதார குமிழ்கள் வந்து வெடிக்காமல் இருப்பதற்கு இந்த மாதிரியான முன்னெச்சரிக்கைகள் அவசியம்.

அந்த வகையில் ராஜன் நடவடிக்கை பாராட்டத்தக்கதே!

இந்த சமயத்தில் போட்டி போட்டுக் கொண்டு சந்தையைக் கூட்டி குறைத்து படாத பாடு படுத்தி வருகிறார்கள். அதில் சிக்காமல் நல்ல பங்குகள் குறைந்த விலைக்கு கிடைக்கும் போது வாங்கி போடலாம்.

மிக நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாங்கும் வாய்ப்பே.

எமது போர்ட்போலியோ வரும் ஏப்ரல் 11 அன்று வெளிவருகிறது. அதிக நண்பர்கள் இணைய விருப்பம் தெரிவித்ததற்கு நன்றி!

மேலும் விருப்பமுள்ள நண்பர்கள் ஏப்ரல் 1௦க்குள் இணைந்தால் பட்டியலை தயார் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

தொடர்பு மின் அஞ்சல் முகவரி: muthaleedu@gmail.com, 
முதலீடு கட்டண சேவை

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக