ஜீரோ இண்டர்நெட் என்ற பெயரில் ஏர்டெல் செய்த தந்திர நடவடிக்கைகள் இறுதியில் கடும் விவாதத்திற்கு வந்து விட்டது.
சில குறிப்ப்பிட்ட மொபைல் ஆப்களுக்கும் மட்டும் ஜீரோ இண்டர்நெட் என்பதன் மூலம் ஏர்டெல் இலவசமாக இன்டர்நெட் கொடுக்க முனைந்தது. அதற்கான கட்டணத்தை ஆப் நிறுவனங்களிடம் வாங்கி விடுவார்கள்.
இது ப்ளிப்கார்ட் போன்ற வியாபர தளங்களுக்கு சாதகமாக அமையும் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம்.
இதனை ப்ளிப்கார்ட்டும் முதலில் ஆதரித்தது. இன்டர்நெட் பயனாளிகளின் கடுங்கோபத்தை பார்த்து தற்போது பின் வாங்கி விட்டது.
ஆதரித்த ப்ளிப்கார்ட்டை பழி வாங்கும் விதமாக அவர்களது ஆப்களுக்கு மோசமான ரேட்டிங் கொடுத்ததும், ஆப்களை தங்களது மொபைலில் இருந்தும் பலர் நீக்க ஆரம்பித்து விட்டனர்.
இருப்பதும் போய் விடக் கூடாது என்ற நோக்கில் உங்க விருப்பம் அது வென்றால் எங்க விருப்பமும் அது தான் என்று டயலாக் சொல்லி ப்ளிப்கார்ட் விலகி கொண்டது.
இந்த நிலையில் தான் இணைய சமநிலை என்ற கோஷம் இந்தியாவில் அதிக அளவில் எழுந்துள்ளது.
இன்டர்நெட் என்பது நாட்டின் சொத்து. ஸ்பெக்ட்ரம் மூலமாக சிலருக்கு குத்தகைக்கு விடப்படுகிறது. குத்தகை எடுப்பவர்கள் சிலருக்கு சாதகமாக மட்டும் இன்டர்நெட் டேட்டாவை கட்டுப்படுத்தினால் சமநிலை பாதிக்கப்படும்.
இது தான் இணைய சமநிலை தொடர்பான அடிப்படை விளக்கம்.
ஜீரோ இண்டர்நெட் என்று சில ஆப்களை இலவசமாக வழங்கும் ஏர்டெல் காலப்போக்கில் சில ஆப்களுக்கு மட்டும் அதிக விரைவான இன்டர்நெட் சேவை வழங்குவோம் என்று சொல்லவும் வாய்ப்பு உள்ளது.
வாட்ஸ்ஆப், ஸ்கைப் போன்ற மென்பொருள்களால் மக்கள் எஸ்எம்எஸ் கூட அனுப்பவதில்லை. காலும் செய்வதில்லை.
இதனால் வருமானம் பாதிக்கப்படும் என்று கருதும் டெலிகாம் நிறுவனங்கள் இந்த மென்பொருள்களை இண்டர்நெட் டேட்டாவை பயன்படுத்தி குறி வைத்து தாக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையை தவிர்க்க தான் இணைய சமநிலை அவசியமாக உள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த இணைய சமநிலை ஏற்கனவே பாதுகாக்கப்படுகிறது.
நாம் தற்போது தான் இணைய உலகத்திற்கு நுழைந்து உள்ளோம் என்பதால் இங்கு அதிக அளவில் ரூல்ஸ் கிடையாது. இதனால் ட்ராய் நுகர்வோர்களிடம் கருத்து கேட்க ஆரம்பித்து உள்ளது.
மொத்தத்தில் தற்போதைய எதிர்ப்பு நல்லது தான். இது தொடர்பான் சட்டங்களே இல்லாத நம் நாட்டில் புதிய வழிமுறைகள் கிடைக்க வழி வகுக்கும்.

எப்படி சார்.......!!!!!!!! நேற்றுதான் இனைய சமநிலைபற்றி நாணயம் விகடனில் ஒரு கட்டுரை படித்தேன். இதைப்பற்றி தாங்கள் எதுவும் எழுதவில்லையே என்று நினைத்தேன்....... இன்று பார்தால் ........ இனைய சமநிலை பற்றிய கட்டுரை........ அருமை..!!!!!
பதிலளிநீக்குஆஹா..அப்படின்னா இனைய சமநிலைக்கு நூறு வயசு தான்..:)
பதிலளிநீக்கு