ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

வெளிநாட்டிற்கு சென்றால் வருமான வரியில் சொல்ல வேண்டும்

அடுத்த வருடம் வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது பல இதர தகவல்களையும் இணைக்க வேண்டும் என்று அரசு கூறி உள்ளது.

இதன்படி,

இனி வெளிநாடு செல்பவர்கள் முழு விவரங்களுடன் வெளிநாட்டு செலவுகளுக்கான மூலங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
இது போக அணைத்து வங்கி கணக்குகளையும் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

பல வழிகளில் வந்துள்ள வருமானத்தை கண்காணிக்க இந்த வங்கி கணக்குகள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.


இந்த வங்கி கணக்குகளில் உள்ள பண இருப்புத் தொகை குறித்த விவரங்கள் வருமான வரி படிவங்களில் பெறப்படும். இதன் மூலம் மாத வருமானம் தாண்டி பிற வழிகளில் வரும் பணத்திற்கும் வரி கட்ட வேண்டி இருக்கும்.

புதிதாக கொண்டு வரப்படும் படிவங்கள் 14 பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்று சொல்லி இருப்பது தான் நெருடலை ஏற்படுத்துகிறது.

இவ்வவளவு கடினமான முறையானது ஆடிட்டர் இல்லாமல் வருமான வரி பதிவு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி விடும். முடிந்த வரை எளிமையாக வருமான வரி பதிவு செய்ய வைப்பது தான் நன்றாக இருக்கும்.ஆதார் எண்களில் வங்கி கணக்குகளை இணைத்து எலெக்ட்ரானிக்ஸ் முறைகள் மூலம் வங்கி கணக்குகளை கண்காணிப்பது தான் அரசுக்கு உதவியாக இருக்கும். இதே மாதிரியான நடைமுறை தான் வெளிநாடுகளில் பின்பற்றப்படுகிறது.

பெரிய அளவில் புழங்கும் தொகைகளை கண்காணிக்காமல் வெளிநாடுகளுக்கு சுற்றுலாவிற்கு செல்லும் மக்களிடம் ஏன் அவ்வளவு செலவு செய்தீர்கள்? இது எந்த காசு? என்று என்று சிறு சிறு விவரங்களையும் கேட்டு வந்தால் சலிப்பு தான் வரும்.

தற்போது கார்பரேட் அளவில் சில எதிர்ப்புகள் வந்துள்ளதால் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி புதிதாக கொண்டு வரப்பட்ட நடைமுறைகளை ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக