வியாழன், 16 ஏப்ரல், 2015

பெட்ரோல் பங்குகளின் திசை மாறுகிறது

கடந்த ஒரு வருடமாக கச்சா என்னை விலை கடுமையான வீழ்ச்சி அடைந்து வந்தது.


பாதிக்கும் குறைவாக பேரெல் விலை வீழ்ந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 40$ என்ற விலைக்கும் வந்தது.தற்போது உயர்ந்து வரும் தேவைகள், ஏமன் நாட்டில் உள்ள குழப்பங்கள் போன்றவற்றின் காரணமாக மீண்டும் உயர்ந்து வருகிறது.

பேரெல் 56$ என்ற விலையை அடைந்துள்ளது.

பெட்ரோல், டீசலை நாடு முழுவதும் விநியோகிக்கும் BPCL, HP போன்ற நிறுவனங்களுக்கு இந்த விலை உயர்வு பாதிப்பு தான் ஏற்படுத்தும்.

அதே நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வதால் முழுவதுமாக பெட்ரொலிய பங்குகளை தவிர்க்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

சில பங்குகள் பெட்ரோலிய உயர்வால் பயன் அடையத் தான் செய்கின்றன.

உள்நாட்டில் பெட்ரொலிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கடுமையாக வீழ்ந்த போது தங்கள் உற்பத்தியை இங்கு நிறுத்திக் கொண்டன.

சவுதி அரேபியா போல் தோண்டும் இடமெல்லாம் இங்கு எண்ணெய் கிடைப்பதில்லை. இதனால் செலவு என்பது வளைகுடாவை விட கொஞ்சம் அதிகம் தான்.

இதனால் 40$ என்ற அடிமாட்டு விலைக்கு இறங்கிய போது உள்நாட்டு நிறுவனங்கள் நமக்கு கட்டுப்படியாகாது என்று ஒதுங்கி கொண்டன. உற்பத்தி கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.

இந்த காரணத்தால் Cairn, ONGC போன்ற பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் கணிசமாக அடி வாங்கின.

தற்போது உயர்ந்து கொண்டு வரும் கச்சா எண்ணேய் விலையால் காற்று இந்த பக்கம் திசை மாறி அடிக்க ஆரம்பித்துள்ளது. மீண்டும் இந்த பங்குகள் உயர வாய்ப்பு உள்ளது.

ஆக. மாற்றம் ஒன்றே மாறாமல் உள்ளது!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக