வெள்ளி, 24 ஏப்ரல், 2015

இன்போசிஸ் நிதி அறிக்கையும் பொய்த்தது

இந்த காலாண்டு இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மோசமான நிதியாண்டாக அமைந்துள்ளது.


TCS, HCL, WIPRO என்று வரிசையாக பெரிய நிறுவனங்கள் வளர்ச்சி பெருமளவு இல்லாத நிதி அறிக்கைகளை கொடுத்து இருந்தன.



இறுதியாக, இன்போசிஸ் நிதி அறிக்கை மட்டுமே எதிர்பார்ப்பில் இருந்தது.

ஏதாவது ஆச்சர்யம் நிகழ்ந்து ஐடி பங்குகள் உயராதா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தது.

ஆனால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிகர லாபம் 4.7% குறைந்துள்ளது. வருமானம் 2.7% குறைந்துள்ளது.

இது சந்தை எதிர்ப்பார்ப்புகளையும் விட குறைவாக இருந்தது.

வரும் வருடத்தில் 10% வளர்ச்சி எதிர்பார்ப்பதாக கூறி உள்ளது.

அதே நேரத்தில் இன்போசிஸ் 1:1 என்று போனஸ் பங்குகளையும் வழங்கியுள்ளது.

சிக்காவின் சில முயற்சிகள் பலனளிக்க இன்னும் சில காலம் ஆகலாம் என்று தெரிகிறது.

மொத்தத்தில் வெறும் ஐடியை மட்டும் நம்பி இந்திய பொருளாதாரம் இருக்கக் கூடாது என்று மட்டும் நன்கு தெரிகிறது.

சில ஐடி பங்குகள் அளவுக்கு மீறி சரிந்துள்ளன. அவைகளை மட்டும் வாங்குவதே தற்போது பலனைத் தரும்.

Also Read,
தொடர்ந்து வீழ்ச்சி அடையும் ஐடி பங்குகள்


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக