புதன், 29 ஏப்ரல், 2015

200 நாள் தாழ்வை அடைந்த நிப்டி. என்ன செய்யலாம்?

நேற்று சந்தையில் நிப்டி 8200க்கும் அருகில் வந்தது. இது கிட்டத்தட்ட 200 நாள் சராசரி புள்ளிகளுக்கும் கீழே வந்துள்ளது.


பொதுவாக நீண்ட கால முதலீட்டில் 200 DMA (Day Moving Averages) என்பன போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தர மாட்டார்கள்.ஆனாலும் அதிக அளவில் எமக்கு வரும் மெயில்கள் மூலம் பதற்றத்தை உணர முடிகிறது. இதனால் இந்த நிலையை குறுகிய கால முதலீட்டு தந்திரங்கள் வழியாக பார்ப்போம்.

டெக்னிக்கல் சார்ட் அடிப்படையில் பார்த்தால் 200 நாள் சராசரி என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

200 நாள் சராசரிக்கும் கீழ் சந்தை சென்றால் கரடியின் அதீத பிடியில் சந்தை செல்கிறது என்று அனுமானிக்கப்படும். அதன் பிறகு சில மாதங்கள் கரடியின் பிடியிலே சந்தை இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

அதே நேரத்தில் 200 நாள் சராசரியை தொடும் போது சந்தை தனது வலுவான அடித்தளத்தை எட்டியுள்ளது. இதனால் மீண்டும் உயரும் என்பது இன்னொரு சாரார் நம்பிக்கை.

அதற்கு தகுந்தவாறு சந்தையும் கடந்த மூன்று நாட்களாக கூடுகிறது, குறைகிறது என்றே போக்கு காட்டி உள்ளது.


ஆக, 200 நாள் தாழ்வு என்பது ஒரு எல்லையாகவே உள்ளது. அங்கும் போகலாம், இங்கும் போகலாம் என்ற நிலைமையை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த சூழ்நிலையில் தான் அடுத்தக் கட்ட நகர்வு என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போதைய நிலைக்கும் கீழ் சென்றால் கரடியின் பிடி இறுகி சில மாதங்களுக்கு பெரிய அளவிலான உயர்வுகள் தடைபடலாம்.

அதே நேரத்தில் இதே நிலையில் இருந்து மீண்டும் ஒரு 5% உயர்ந்தாலும் கூட சந்தை இன்னும் கரடியின் பிடியில் சிக்கவில்லை. இதனை ஒரு குறுகிய கால கரெக்சன் என்று எடுத்துக் கொள்ளலாம்.

தற்போதைய நேரத்தில் இதனை தீர்மானிக்க முடியாது.இந்த மாததிற்கான குறுகிய கால வர்த்தகங்கள் மே 4ந் தேதி அன்று முழுமையாக முடிகிறது.

அதன் பிறகு தான் உண்மையான நிலை தெரிய ஆரம்பிக்கும். அது வரை முதலீட்டு முடிவுகளை சிறிது தள்ளியும் போட்டுக் கொள்ளலாம்.

மீண்டும் சொல்கிறோம். இது குறுகிய கால டிப்ஸ் மட்டும் தான்.

நமது நீண்ட கால முதலீடுகளுக்கு இதனை கருத்தில் கொள்ள அவசியம் இல்லை. இன்னும் அடிப்படைகள் வலுவாகவே உள்ளது.

நேற்று வெளியான டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களின் முடிவுகள் கூட நன்றாகவே இருக்கின்றன.

அதனை எல்லாம் கரடியின் பிடியில் உள்ள சந்தை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் வீழ்ச்சிகள் தொடர்கின்றன.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக