திங்கள், 6 ஏப்ரல், 2015

ஜீரோ இண்டர்நெட் - ஏர்டெல்லின் சூப்பர் வியாபர தந்திரம்

IIMல் படித்தவர்களுக்கு எப்பொழுதுமே IITயில் முடிப்பவர்களை விட அதிக சம்பளம் கிடைப்பதுண்டு. காரணம் இல்லாமல் இல்லை.

மாங்கு மாங்கு என்று வேலை செய்யாமல் சிறிய வியாபர தந்திரத்தில் இருந்த இடத்தில் இருந்து உலகை ஆட்டுவித்து விடுவார்கள்.

அத்தகைய ஒரு தந்திரம் தான் ஏர்டெல் வழங்கவிருக்கும் ஜீரோ இண்டர்நெட் சேவை என்று சொல்லலாம்.



நாம் Whatsappல் கால் செய்வது இலவசம் என்றாலும்  பின்னால் டேட்டாவிற்கு என்று காசு போய் கொண்டு தான் இருக்கும். அந்த டேட்டா காசு டெலிகாம் நிறுவனங்களுக்கு சென்று விடும்.

தற்போது ஏர்டெல் நிறுவனம் சில அப்ளிகேசன்கள் இலவசமாகவே டேட்டா நெட்வொர்க்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது. இதற்கு ஜீரோ இண்டர்நெட் என்று பெயர் கொடுத்துள்ளது.

இது ஏர்டெல்லிற்கு எப்படி பயன்படும் என்றால், 

நம்மிடம் காசு வாங்க மாட்டார்கள். அப்ளிகேசன்கள் தரும் நிறுவனங்களிடம் அந்த காசை வசூலித்து விடுவார்கள்.

உதாரணத்திற்கு ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேசன் பயன்படுத்தினால் தற்போது நமது பேலன்சில் இருந்து பணம் சென்று கொண்டு இருக்கும். இனி அவ்வாறு பணம் செல்லாது. 

எவ்வளவு பயன்படுத்துகிறோமோ அந்த தொகையை ப்ளிப்கார்ட் நிறுவனம் ஏர்டெல்லிற்கு கொடுத்து விடும். 

இலவச இன்டர்நெட் என்று நாம் ப்ளிப்கார்ட் அப்ளிகேசனை தொடர்ந்து பயன்படுத்துவோம். பத்து பொருட்களை பார்த்தால் ஒரு பொருளையாவது வாங்கி விடுவோம். அதில் ப்ளிப்கார்ட்டிற்கும்  வருமானம் கிடைக்கும்.

மொத்தத்தில் நமது கையில் இருக்கும் பணத்தை எப்படியாவது செலவு செய்ய வைத்து விடுவார்கள்.

சில தேர்ந்தெடுத்த அப்ளிகேசன்கள் மட்டுமே இந்த சலுகையை பெறும் என்று ஏர்டெல் அறிவித்து உள்ளார்கள். 

அதில் கண்டிப்பாக Whatsapp இருக்காது என்று நம்புகிறோம். அவர்கள் தான் இலவச கால் கொடுத்து ஏர்டெல்லிற்கே உலை வைப்பவர்களாயிற்றே!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக