நோக்கியா என்றால் மொபைல் போன்களை தயாரிப்பவர்கள் என்ற முறையிலே நமக்கு அறிமுகமாகப்பட்டு இருக்கும்.
காகித தொழிற்சாலையில் தொடங்கி மொபைல் போன்கள், மொபைல் டவர் உபகரணங்கள் என்று பிற பல பரிணாமங்களும் அவர்களுக்கு உண்டு.
தற்போது மீதி எல்லாவற்றையும் விற்று விட்டு மொபைல் டவருக்கு தேவையான உபகரணங்களை மட்டும் தயாரித்து வருகிறார்கள்.
டெலிகாம் ஏரியாவில் ஆரம்ப கட்டத்தில் நோக்கியா வலுவாகத் தான் இருந்தார்கள்.
எரிக்சன் நிறுவனம் டவர் உபகரணங்கள் தயாரிப்பில் கடும் போட்டி கொடுத்த பிறகு நோக்கியா பின் தள்ளப்பட்டது.
இதே அளவு பாதிப்பு அல்கடேல், லுசென்ட், சீமென்ஸ் போன்ற பிற நிறுவனங்களுக்கும் ஏற்பட்டது.
டெலிகாம் வியாபாரம் சுணக்கம் அடைந்த பிறகு லுசென்ட், அல்கடேல் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. ஆனாலும் அங்கு நஷ்டம் தீர்ந்த பாடில்லை.
அதே போல் சில ஆண்டுகள் முன்பு நோக்கியாவும் சீமென்ஸ் நிறுவனத்தை வாங்கியது.
இந்த நிலையில் எல்லா இணைப்புகளையும் தூக்கி சாப்பிடும் விதமாக அல்கடேல்-லுசென்ட் நிறுவனத்தை நோக்கியா வாங்கியுள்ளது.
இனி, டெலிகாம் துறையில் நோக்கியா, எரிக்சன் என்ற இரண்டு நிறுவனங்கள் தான் பெரிய அளவில் செயல்பட உள்ளது.
அநேகமாக செல்போன் தொழிலை மைக்ரோசாப்டிடம் விற்ற பிறகு அந்த முதலீட்டை டெலிகாம் துறைக்கு திருப்பி விட்டிருப்பார்கள் போல.
இரண்டு நோஞ்சான்கள் சேர்ந்தால் பலசாலி ஆகி விட விடலாம் என்று உறுதியாக சொல்ல முடியாது. அது போல் தான் இந்த டீலும்.
ஆனால் தேவையில்லாத செலவுகளை குறைப்பது தான் இந்த டீலின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதனால் இந்தியாவில் வேலை பார்க்கும் 3000 பொறியியல் நிபுணர்கள் வேலைக்கும் ஆபத்து வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக