வியாழன், 2 ஏப்ரல், 2015

மெதுவாக அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் பங்குச்சந்தை

கடந்த மார்ச் மாதத்தில் இந்திய பங்குச்சந்தை சந்தை எதிர்மறையிலே இருந்தது.


ஏமனில் ஏற்பட்ட குழப்பங்கள், இதனால் பெட்ரோல் விலைகளில் ஏற்பட்ட மாறுதல்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, வெளியே சென்ற FII முதலீட்டாளர்கள் போன்றவை வீழ்ச்சிகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.



நாம் முன்பே சொல்லியவாறு இவை எல்லாம் தற்காலிக காரணிகளே.

குறுகிய காலத்தில் சிறு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் நமது அடிப்படை சரியாக இருந்தால் அசைப்பது கஷ்டமே. அந்த வகையில் இந்திய பொருளாதாரம் நல்ல விதமாகவே பார்க்கப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த வார சந்தை அமைந்தது. சந்தை திறந்து இருந்த மூன்று நாட்களிலுமே புள்ளிகள் உயர்விலே இருந்தன.

மீண்டும் 29,000 புள்ளிகளை கடந்து இருந்தது நம்பிக்கை கொடுத்தது. அதிலும்  FII போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளார்கள் என்பதும் கூடுதல் இனிப்பான செய்தியாகும்.

மறைமுக வரி வசூல் அரசிற்கு எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்துள்ளதும் சாதகமான விடயமாகும். நிதிப் பற்றாக்குறையை கணிசமாக குறைக்க இது பெரிதும் உதவும்.

இது போக, நான்காவது காலாண்டு நிதிநிலை முடிவுகள் இந்த ஏப்ரல் மாதத்தில் வெளிவர ஆரம்பிக்கும். வருடாந்திர நிதியாண்டு முடிவு என்பதால் மேலும் பல விவரங்கள் வெளிவர இருக்கிறது.

ஐடி நிறுவனங்களை தவிர மற்ற நிறுவன முடிவுகளில் அவ்வளவு சேதம் இருக்காது என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு நாம் எதிர்பார்த்த நிதி முடிவுகள் வரும் போது,

ஜனவரி நிதி முடிவுகளில் 26,000 என்ற சென்செக்ஸ் புள்ளிகளை கீழ்மட்ட நிலையாக எடுத்துக் கொண்ட சந்தை ஏப்ரல் நிதி முடிவுகள் மூலம் 27,500 புள்ளிகளை அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம்.

காலாண்டு முடிவுகள் வெளிவரும் போது சந்தை மெதுவாக தனது மதிப்பீடல்களை கூட்டிவிடுவதையும் காணலாம்.

இனி அதிக அளவு காத்திராமல் ஏப்ரல் முதல் பாதியில் முதலீட்டை கூட்டுவது நன்றாக இருக்கும்.

எமது போர்ட்போலியோ ஏப்ரல் 11 அன்று வெளிவருகிறது. கடந்த மாதங்களைப் போல் வெற்றி பெறும் என்று நம்புகிறோம்.

விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பையும் பார்க்கலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக