வியாழன், 23 ஏப்ரல், 2015

இனி வருமான வரி படிவங்களை போஸ்டில் அனுப்ப வேண்டாம்

கடந்த வருடம் வருமான வரி பதிவு செய்யம் போது யோசித்ததுண்டு.


இ-படிவங்கள் என்று தான் பெயர். ஆனால் எல்லாம் பதிவு செய்த பிறகு பிரிண்ட் எடுத்து போஸ்டில் அனுப்ப வேண்டி இருக்கிறதே என்று நினைத்ததுண்டு.



இது இ-படிவம் என்பதன் முழுப் பயனை அனுபவிக்க முடியாமல் தடுத்து இருந்தது.

தற்போது வருமான வரித்துறை மாற்றி விட்டது. நல்ல முடிவு.

இனி இ-பைல் செய்த பிறகு போஸ்டில் அனுப்ப வேண்டாம்.


அதற்கு உங்களது ஆதார் எண்ணை வருமான வரி படிவத்தில் இணைக்க வேண்டும்.

உங்கள்  ஆதார் எண்ணில் உள்ள மொபைல் எண்ணுக்கு OTP முறையில் ரகசிய குறியீடு அனுப்பப்படும்.

அதில் உள்ள குறியீட்டை டைப் செய்தால் வேலை முடிந்தது.

பெருமளவு வேலை மிச்சம்ப்பா..கோடி புண்ணியம் வருமான வரி அதிகாரிகளுக்கு!

ஆதார் தொடர்பாக கோர்ட் பல தீர்ப்புகள் வழங்கினாலும் அது இல்லாமல் இனி வேலைக்கு ஆகாது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக