நேற்று சத்யம் மோசடி வழக்கில் ராமலிங்க ராஜுவிற்கு ஏழு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சதயம் மோசடி தொடர்பான விரிவான பதிவை இங்கு பார்க்கலாம்.
இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்த சத்யம் ஊழல்
ஒரு முதலீட்டாளனாக ராஜு சிறைக்கு சென்றதுடன் நமது தேடல் முடிவடைவதில்லை. அதனை வாங்கிய டெக் மகிந்திரா என்ன ஆனது என்பது அறிவது மிகவும் அவசியம் என்பதால் இந்தக் கட்டுரையில் தொடர்கிறோம்.
2008ல் முன்னூறு ரூபாயில் இருந்த சத்யம் பங்கு மோசடிக்கு பிறகு ஆறு ரூபாய்க்கு சென்றது. சத்யம் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டன. இப்படி பல சட்ட சிக்கல்கள் இருந்து வந்தன.
ஆனாலும் சத்யம் நிறுவனத்தை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டு தான் இருந்தன.
அதற்கு அவர்களிடம் இருந்த பல துறை பெரிய அளவிலான டீல்களும், உலகம் முழுவதும் பரவி இருந்த கஸ்டமர்களும் காரணமாக இருந்தது.
இது போக, ராஜூ தான் மோசடி செய்தேன் என்று சொல்லும் சில தினங்கள் முன்பு வரை சத்யம் ஒரு முன்னணி நிறுவனமாகவே பார்க்கப்பட்டது
அதனால் தகுதி வாய்ந்த பணியாளர்களை தொடர்ந்து இணைந்து வந்தார்கள்.
டீல்,கஸ்டமர்,பணியாளர் என்ற இந்த மூன்றும் தான் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்திற்கு முக்கிய தேவை என்பதால் சத்யத்தை ஒரு பொன் முட்டையிடும் வாத்தாகவே கருதினார்கள்.
இதனால் டெக் மகிந்திரா, விப்ரோ போன்ற நிறுவனங்கள் சதயத்தை வாங்குவதற்கு மிக ஆர்வமாக இருந்தன. இறுதியில் போட்டியில் டெக் மகிந்திரா சத்யத்தை கைப்பற்றியது.
அது வரை பத்தோடு ஒன்றாகவே டெக் மகிந்திரா அறியப்பட்டு இருந்தது. ஆமாம். இந்திய ஐடி நிறுவனங்களில் ஒன்பாதாவது பெரிய நிறுவனமாகவே இருந்தார்கள். அதாவது Mid Cap நிறுவனமாகவே பார்க்கப்பட்டு இருந்தது.
2010ல் டீல்கள் முடியப்பட்ட்டது. 2012ம் நிதி ஆண்டில் டெக் மகிந்திராவின் வருமானம் 115% வளர்ச்சி அடைந்தது. மற்ற நிறுவனங்கள் 10% அளவில் வளர்ச்சி கொடுத்துக் கொண்டு இருக்க டெக் மகிந்திராவின் இந்த வளர்ச்சி பிரமிக்க வைத்தது.
இதனால் ஒன்பதாவது இடத்தில இருந்த டெக் மகிந்திரா இந்தியாவின் ஆறாவது பெரிய ஐடி நிறுவனமாக மாறியது.
அடுத்ததாக,
2008 வரை டெக் மகிந்திரா நிறுவனம் ஒரு டெலிகாம் மென்பொருள் நிறுவனமாகவே அறியப்பட்டு இருந்தது. அதிலும் British Telecom என்ற நிறுவனம் மூலம் தான் 42% வருமானம் வந்தது.
அதனால் British Telecom நிறுவனத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் டெக் மகிந்திராவை மூடி விடலாம் என்றே நிலைமை.
சதயம் வருகைக்கு பிறகு அந்த நிலை முற்றிலும் மாறியது.
வங்கி, சில்லறை வியாபாரம், போக்குவரத்து என்று பல துறைகளில் அதன் மென்பொருள்களை எடுத்து சென்றது.
தற்போது மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் டெக் மகிந்திரா மிக பரவலான வியாபர மாடலை கொண்டுள்ளது. அது போக உலக அளவில் பல நாடுகளில் ப்ராஜெக்ட்களை செய்து வருகிறது.
ஆக, ராமலிங்க ராஜுவின் பேராசை டெக் மகிந்திராவை உச்சத்தில் கொண்டு சென்றது. டெக் மகிந்திரா ஒரு முழுமையான மென்பொருள் நிறுவனமாக மாற சத்யம் பெரிதும் உதவி செய்தது என்று சொல்லலாம்.
குறிப்பு:
எமது ஏப்ரல் மாத கட்டண போர்ட்போலியோ நாளை (April 11) வர விருப்பதால் இணைய விரும்பும் நண்பர்கள் இன்றைக்குள் இணைந்தால் உதவியாக இருக்கும்.
muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் எம்மை தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக