திங்கள், 27 ஏப்ரல், 2015

விஜய் மல்லையாவின் விளையாட்டு சாம்ராஜ்யம் சரிந்த கதை - 3

காந்தி வரலாறு மட்டும் நமக்கு தெரிந்தால் போதாது. மல்லையா வரலாற்றையும் குடிமகன்கள் தெரிய வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் நாம் இந்த தொடரை எழுதி வருகிறோம். :):):)


அதனால் முந்தைய பாகத்தையும் படித்து இங்கு வருக..
விஜய் மல்லையாவின் விளையாட்டு சாம்ராஜ்யம் சரிந்த கதை - 1

இதை எல்லாம் தாண்டி அவரது ஒரு பெரிய தவறு என்னவென்றால் Kingfisher விமான நிறுவனம் தான்.ஏதாவது ஒரு வியாபாரம் செய்து Kingfisher என்ற பிராண்டை அதிக அளவில் பாப்புலராக்க வேண்டும் என்று நினைத்தார்.

அவரது ஆலோசகர்கள் டெலிகாம் துறையில் இறங்கலாம் என்று தான் ஆலோசனை எடுத்தார்கள். ஆனால் மல்லையா ஆடம்பரமும் சேர்ந்து வர வேண்டும் என்று விரும்பியதால் விமான துறைக்கு தாவினார்.

மதுவிற்கும் விமானத்திற்கும் உள்ள வித்தியாசம் புரிபடாமலே கடைசி வரை இருந்து விட்டார்.

டாஸ்மார்க்கில் என்ன விலை ஏற்றினாலும் குடிப்பவர்கள் குறையவில்லை என்பதே நிதர்சனம். அதனால் 25 சதவீதம் என்ன, 100 சதவீதமே லாபம் வைத்து விற்கலாம். குடிக்க நாங்க ரெடி..

ஆனால் இந்திய விமான துறை என்பது வேறு.

அதிக அளவு வரி, ஏர்போர்ட் பார்கிங், அதிக எரிபொருள் கட்டணம் என்று எல்லாவற்றையும் தாண்டி வந்தால் கடும் போட்டி இங்கு. இறுதியில் ஒன்று முதல் இரண்டு மார்ஜின் லாப சதவீதம் தான் இங்கு கிடைக்கும்.வரியை மட்டும் கொடுத்தா போதும், டிக்கெட் காசே தர வேண்டாம் என்று ஏர்டெக்கான் போன்ற  மற்ற நிறுவனங்கள் விற்க முனைந்த போது Kingfisher திணறி விட்டது.

கடைசியில் ஏர்டெக்கான் நிறுவனத்தையும் வாங்கி போட்டியில்லாத நிலையை ஏற்படுத்த முயன்றார்.

இது தான் பெறும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

அது வரை Kingfisher என்றாலே ஆடம்பரத்திற்கு புகழ் பெற்று இருந்தது.

நடிகைகளின் அழகை மிஞ்சும் பணிப்பெண்கள், உயர்தர உணவு, விமானத்திற்குள் சகல வசதிகள் என்று தான் Kingfisher விமானம் அறியப்பட்டு வந்தது.

இவர் குறைந்த வசதியுடைய டெக்கானை இங்கு கொண்டு வந்து இணைத்த பிறகு Kingfisher ஆடம்பரமும் டெக்கானின் எளிமையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கப்பட்டது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் அதிக அளவு வெளியே தெரியவில்லை.இதனால் பந்தாவுக்காக பறக்கும் அதிக காசு கொடுத்து பயணிப்பவர்களும் வேறு பிளைட்ட்டில் பறக்க தொடங்கினார்கள்.

இணைத்த பிறகும் கிங் பிஷர் விமானமும், டெக்கான் விமானமும் ஒரே இடத்தில் இருந்து ஒரே சமயத்தில் இருந்து கிளம்பும் வகையில் தான் அவர்களது கவனக்குறைவு இருந்தது.

இப்படி பல காரணங்களால் ஒரிஜினல் கிங் பிஷர் படுக்க ஆரம்பித்து விட்டது.

அதை சமநிலை கட்ட டெக்கானுக்கும், கிங்பிஷருக்கும் ஒரே விமான கட்டணம் என்ற முறையைக் கொண்டு வந்தார். இது படு தோல்வியை சந்தித்தது.

ஒரே கட்டணம் செலுத்தி வசதி குறைவான அரசு பேருந்திலும், சொகுசான ஆம்னி பஸ்சிலும் யார் போக முன் வருவார்கள்?

இப்படி அவரது பல முடிவுகள் தொடர்ந்து தோல்வியையே சந்தித்தன,மேலும் ராஜ்யசபா எம்பியாக இருந்ததால் பல அரசியல் தொடர்புகள் இருந்தன. கடன்கள் எளிதாக கிடைத்தன.

கிங் பிஷர் நிறுவனத்தில் லாபம் கிடைக்கிறதா என்று ஆராயாமல் தொடர்ந்து கடனை வாங்கி குவித்து வந்தார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், Kingfisher ஆரம்பித்ததில் இருந்து ஒரு தடவை கூட லாபம் கொடுக்கவில்லை என்பது தான். இறுதியில் கையில் இருக்கும் விமானங்களும் ஏலத்தில் போக ஆரம்பித்தன.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது அவருக்கு அதீத ஆர்வம் இருந்து வந்தது. ஆனால் அது போதையாக மாறிய போது தான் பிரச்சினையாக மாறி போனது. மாறன்கள் ஸ்பைஸ் ஜெட்டை விட்டது போல் கைவிட மனதில்லை.

மூழ்கும் கப்பலுக்காக பல ரிஸ்க்குகளை எடுத்து வந்தார். நல்ல சென்று இருக்கும் United Spirit நிறுவனத்தில் தமக்கு இருக்கும்  பங்குகளை வங்கியில் அடகு வைத்து கிங்பிஷேருக்கு செலவிட்டார்.

இறுதியில் இரண்டும் கைவிட்டுப் போய் விட்டது.இவர விற்ற, அடகு வைத்த United Spirit பங்குகள் எல்லாம் Diageo என்ற நிறுவனம் வாங்கி குவித்தது. தற்போது Diageo தான் பெரும்பான்மை பங்குதாரர்.  சமயம் பார்த்து மல்லையாவை வெளியே தள்ள வேண்டும் என்று காத்து இருந்தார்கள்.

இன்று United Spirit தலைவராக இருந்து பணத்தை திருப்பி விட்டு விட்டார் என்பது தான் அவர் மேல் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு.

இதனால் அவரிடம் உள்ள தலைவர் உட்பட பல பதவிகளும் பறி போகலாம் என்பது தான் தற்போதைய நிலைமை.

தற்போது UB Group என்பதன் கீழ் வரும்  Mangalore Chemicals and Fertilizers என்ற நிறுவனமும், பெங்களூர் கிரிக்கெட் அணியும் அவரிடம் உள்ளது. வேறு எதுவும் மிஞ்சவில்லை.

என்ன பழி வந்தாலும் மனிதர் சீக்கிரம் அசந்து போக மாட்டார் என்பதால் அவரை இன்னும் புறக்கணிக்க முடியவில்லை.

ஆனாலும் ஒரு கஷ்டமான நிலையில் தனது நிறுவன பணியாளர்களை ரோட்டில் இறங்கி  சம்பளத்திற்காகவே போராடும் நிலையை கொண்டு வந்து விட்டதால் அவரை நம்பி அவரது நிறுவனத்தில் ஒரு ப்யூன்  கூட வேலைக்கு சேர்வாரா என்பது தான் சந்தேகம்.

முடிவடைகிறது...


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை சார்... சாராயத்திற்க்கும் விமானத்திற்க்கும் சம்பந்தம் இல்லைதான்.. ஆனால் சன் டி.வி.காரர்கள் ஸ்பைஸ் வாங்கி இந்தளவு ஆகவில்லையே அது எப்படி?

    பதிலளிநீக்கு
  2. ஆனால் தங்களால் முடியவில்லை என்று தெரிந்தவுடன் விமானத்துறையில் கிடைத்தது போதும் என்று வெளியேறி விட்டார்கள். அது நல்லதாகி போய் விட்டது. ஒரு வேளை மல்யாவின் அனுபவத்தில் கற்றும் இருக்கலாம். நன்றி சார்!

    பதிலளிநீக்கு