ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பல தரவுகளால் குழப்பத்தில் பங்குச்சந்தை

தற்போது சந்தை வீழ்ச்சி அடைந்து உள்ளது.சென்செக்ஸ் 23,300 வரை வந்து விட்டது.


இதனை வீழ்ச்சி என்று சொல்வதை விட அங்குமிங்கும் அலையாக ஓடிக் கொண்டு உள்ளது என்று சொல்லலாம்.



28,000க்கு தாழ்ந்து வருகிறது. மீண்டும் 29,500 வரை செல்கிறது. இப்படியே மூன்று தடவைக்கு மேல் பார்த்தாகி விட்டது.

சந்தையை உயர வைக்கும் காரணிகள் பெரிதளவு இல்லாததால் சிறிய எதிர்மறை செய்திகள் வந்தால் கூட கீழ் வந்து விடுகிறது.

குறுகிய கால அளவில் பார்த்தால் உலக அளவில் தூக்கி விடும் காரணிகள் ஏதும் இல்லை.

இது போக, கச்சா எண்ணெய் விலை மீண்டும் மேலே செல்ல ஆரம்பித்துள்ளது.

கடந்த வருடம் முழுவதும் கச்சா எண்ணெய் வீழ்ச்சியில் பயனடைந்த இந்தியாவிற்கு இது எதிர்மறை காரணியாகும். இதனால் இறக்குமதியின் அளவு 10% வரை உயர்கிறது.

அதே நேரத்தில் உலகில் உள்ள பல நாடுகளின் மந்தமான பொருளாதரத்தால் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை.

இதனால் இறக்குமதி வர்த்தக பற்றாக்குறை கொஞ்சம் அதிகரித்து உள்ளது.

இதில் இந்திய அரசோ, நாமோ பெரிய அளவில் ஒன்றும் செய்ய முடியாது. விதிப்படி தான் நடக்கும். தற்காலிக நிகழ்வு என்றும் கூறிக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் பணவீக்கம் இன்னும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலே உள்ளது.

அதிலும் கடந்த மாதத்தில் வெளிவந்த உணவு பொருட்களின் பணவீக்க வீழ்ச்சி ரிசர்வ் வங்கிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்.

முக்கிய தொழில் துறையான உற்பத்தி துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது நல்ல விடயம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாப சதவீதம் உயர்ந்துள்ளது இதற்கு ஒரு சான்றாகும்.

இதுவும் முதலீட்டிற்கான தருணம் என்ற எமது கருத்துக்களை இன்னும் தொடரத் தான் விரும்புகிறோம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக