புதன், 22 ஏப்ரல், 2015

அமிதாப் வந்தால் நிறுவனம் அமோகமாக செல்லுமா?

கடந்த ஒரு மாதமாக எங்கு பார்த்தாலும் கல்யான் ஜிவல்லர்ஸ் நகைக்கடை விளம்பரம் தான் .


அமிதாப்பும் நட்சத்திரங்களும் விட்ட செண்டிமெண்ட் தாங்க முடியாத அளவு தான் இருந்தது..

விளம்பரத்தின் கருவுக்கும் நகைக்கடைக்கும் என்ன சம்பந்தம் என்று தான் இறுதி வரை புரியவில்லை.



விளம்பரம் ஈர்ப்பைக் கொடுத்ததை விட சலிப்பை தான் அதிகம் சம்பாதித்துக் கொடுத்திருக்கும்.

புதிய நகைக்கடை ஆரம்பிக்க 200 கோடி செலவழித்து உள்ளார்கள். அதில் 20 முதல் 30 கோடி வரை இத்தகைய விளம்பரத்திற்கு செலவழித்து இருப்பார்கள் என்றும்  நம்பலாம்.

அடிப்படைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நட்சத்திரங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே நிறுவனம் அமோகமாக சென்று விடும் என்று நம்புபவர்களுக்கு பங்குச்சந்தையில் கீழ் வரும்  நிறுவன வரலாறு பாடமாக இருக்கும்.

அதில் ஒரு ஏதேச்சை ஒற்றுமையாக அந்த நிறுவனத்திலும் நம்ம அமிதாப்ஜி தான் அம்பாசடர்.



அந்த பிராண்டின் பெயர் "Reid & Taylor suiting".   நான்கு வருடங்கள் முன் அமிதாப்ஜி தான் கோட் சூட் போட்டு பிரபலப்படுத்தினார்.

இந்த பிராண்டை தயாரித்த நிறுவனத்தின் பெயர் S Kumars. சந்தையில் Kumar Nationwide என்ற பெயரில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

இவர்கள் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அதிக அளவில் அகலக்கால் வைத்தது தான்.

தன்னுடைய வருமானத்திற்கு மிச்சமாகவே கடன்களை வாங்கி குவித்தது.

விற்பனையை மிஞ்சும் விதமாக நட்சத்திர விளம்பரங்களுக்கு மிக அதிகமாக செலவு செய்தது.

தொலை நோக்கு பார்வை இல்லாமல் விரிவாக்கம் என்ற பெயரில் கடன்களை வாங்கி வெளிநாடுகளில் கடைகளை திறந்து வைத்தது. கடன்களை திருப்பி செலுத்தும் திட்டம் கடைசி வரை இல்லை.

இவை எல்லாம் மூன்று வருடங்களில் நிறுவனத்தையே இல்லாமல் செய்து விட்டது.



ஆமாம். மூன்று வருடங்களுக்கு முன்னர் 178 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்கு இன்றே மூன்று ரூபாயில் உள்ளது.

அதை விட பரிதாபமாக நிறுவனத்தின் பங்குகள் நிறுவனர்களிடமே இல்லை. வெறும் 4% பங்குகள் மட்டும் தான் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அடமானத்தில் வைக்கப்பட்ட பெரும்பாலான பங்குகள் வங்கிகளாலே விற்கப்பட்டன.

கடந்த 18 மாதங்களாக ஒரு நிறுவனம் நிதி அறிக்கையே தாக்கல் செய்யாமல் சந்தையில் ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நிறுவனம் நடக்கிறதா இல்லையா என்று தவித்த மற்ற முதலீட்டாளர்கள் தனியாக கூட்டம் போட்டு நிறுவனர்களை போர்டிலிருந்தே நீக்க துணித்து விட்டார்கள்.

இந்த நேரத்தில் தான் ஒரே நேரத்தில் பல இடங்களில் பிரமாண்ட ஜீவல்லரிகள், விளம்பரங்களுக்காக  கடுமையான செலவுகள் என்று கல்யான் செல்லும் பாதையும் கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: