வியாழன், 2 ஏப்ரல், 2015

முற்பகல் செய்ததை பிற்பகல் விளைச்சலாக பெறும் மாறன்கள்

அரசியலையும் சன் டிவியையும் பிரிக்க முடியாது. அரசியலால் வளர்ந்தவர்கள். அரசியலை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தியவர்கள். அரசியல் இல்லாவிட்டால் இவ்வளவு வளர்ந்து இருப்பார்களா என்பது சந்தேகமே.




நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் கேபிள் டிவி தொழிலில் ஒரு ஆரோகியமான போட்டி இல்லாததற்கு சன் டிவி செய்த தந்திரங்கள் வியாபார தந்திரங்கள் என்று கூற முடியாது. எல்லாம் நியாயமில்லாத நரித்தந்திரங்கள்.

அந்த நரித்தந்திரங்களின் பலனை தான் தற்போது அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நேற்று கிட்டத்தட்ட அவர்களது மொத்த சொத்தும் முடக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணமான வழக்கு இது தான்.

தமிழகத்தில் மொபைல் நெட்வொர்க் சேவையை வழங்கி வரும் ஏர்செல் நிறுவனம் 2006ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக தொலை தொடர்பு துறையை அணுகியது.

அப்பொழுது தொலை தொடர்பு மந்திரியாக இருந்த தயாநிதி மாறன் பல காரணங்களை கூறி அலைகழித்துள்ளார்.

இறுதியில் அவர் அலைக்கழித்த்தன் மறைமுக காரணத்தை புரிந்து கொண்ட ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சார்ந்த  மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டார்.

இதன் பிறகு மிகக் குறுகிய நாட்களில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைத்து விட்டது.

இதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் SUN DTH நிறுவனத்தில் ஒரு பெருமளவு தொகையை முதலீடு செய்தது.

இதற்கெல்லாம் பின்புலமாக தயாநிதி மாறன் இருந்தார் என்பது தான் குற்றச்சாட்டு.

நேற்று முடக்கப்பட்ட சொத்துக்களில் மாறனின் சன் பங்குகளும் அடங்கும் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இன்றும் நாளையும் சந்தை விடுமுறை. திங்கள் கிழமை சந்தை திறக்கும் போது அநேகமாக சன் டிவி பங்கு கடுமையாக துவைத்து போட வாய்ப்புள்ளது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: