சனி, 2 மே, 2015

VRL Logistics முதல் நாளிலே 43% உயர்ந்தது

VRL Logistics என்ற IPO பங்கை இரு வாரங்களுக்கு முன் பரிந்துரை செய்து இருந்தோம்.


பார்க்க:
VRL Logistics IPOவை வாங்கலாமா?




கடந்த பங்குச்சந்தை தினத்தன்று VRL சந்தையில் பட்டியலிடப்பட்டது.

நாம் எதிர்பார்த்தவாறே முதல் நாளன்று VRL பங்கு 43% உயர்வை அளித்தது.

IPOவில் அதிகபட்ச விலையாக 205 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பட்டியலிடும் போது 288 ரூபாய்க்கு உயர்ந்தது.

ஒரு கட்டத்தில் 309 ரூபாயையும் தொட்டது. அதன் பிறகு இறுதியாக 293 ரூபாயில் நிலை கொண்டது.

ஆக. இது இரு வாரங்களில் கிடைத்த 43% லாபமாகும்.

நிறைய நண்பர்கள் பரிந்துரைகளை கேட்டு வாங்கியதாக அறிந்தோம். அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

IPOவில் அதிர்ஷ்டம் இல்லாத எமக்கு கூட குலுக்கலில் ஒரு லாட் கிடைத்தது.  உடனே விற்று விட்டோம்!

இரண்டு காரணங்களுக்காக இந்த பங்கை தற்போதைய நிலையில் விற்று லாபத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

ஒன்று,
தற்போதைய பங்கு விலையில் VRL பங்கின் P/E மதிப்பு 27க்கு அருகில் வருகிறது. இது இதே துறையில் உள்ள மற்ற பங்குகளை விட மலிவாக இல்லை.

இரண்டாவது,
தற்போது கச்சா எண்ணெய் விலை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. VRL நிறுவனத்தில் பெட்ரோல் செலவுகள் மட்டும் மொத்த செலவுகளில் 35% என்பதாகும். அதனால் தற்போதைய உயர்வில் செலவு அதிகரித்து லாபம் பாதிக்கப்படலாம்.

இதனால் மேலும் பங்கு மெதுவாகவே அதிகரிக்கலாம். அல்லது இதே நிலையிலே ஊசலாடலாம்.

அதனால் லாபத்தை உறுதி செய்து வெளியேறலாம்.

நீண்ட கால முதலீட்டிற்கு இந்த பங்கு ஏற்றது தான். ஆனால் அதனை இன்னும் சில காலாண்டுகள் முடிவுகளை பார்த்த பிறகு முடிவு செய்வதே சரியாக இருக்கும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக