புதன், 17 ஜூன், 2015

பழைய லேப்டாப்புகளை மாற்றுவதற்கு அமேசான் மூலம் ஒரு வழி

தற்போது எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஆயுட்காலம் குறுகி கொண்டே செல்கிறது. இது லேப்டாப்புகளுக்கும் பொருந்தும்.




பழைய லேப்டாப்புகளை பயன்படுத்தாமல் சும்மா எலெக்ட்ரானிக்ஸ் கழிவாக வைத்துக் கொள்வதற்கு பதிலாக அதனை மாற்றிக் கொண்டு புதிய ஒன்றை வாங்குவதும் நல்ல வழி.

இந்த சூழ்நிலையில் பழைய லேப்டாப்புகளை புதியதுடன் மாற்றுவதற்கு அமேசான் ஒரு எக்ஸ்சேஞ் சலுகை வழங்கியுள்ளது.

இதன்படி, நமது லேப்டாப்பின் ப்ரோசெசருக்கு ஏற்றவாறு பிளாட் விலையை நிர்ணயித்து உள்ளார்கள். உதாரணத்திற்கு நமது ப்ரோசெசர் i7 வகையை சேர்ந்ததாக  இருந்தால் 10,000 ரூபாய் தரப்படும் .

ப்ரோசெசர் விவரங்களை நமது கணினியில் MyComputer என்பதில் ரைட் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

மற்ற விலை விவரங்கள் கீழே உள்ளன.



இதற்கு முக்கிய நிபந்தனையாக லேப்டாப் குறைந்தபட்சம் பூட் ஆக வேண்டும். லேப்டாப் திரையில் பெரிதளவு பிரச்சினை இருக்கக் கூடாது.

இதற்கான வழிமுறையாக முதலில் அமேசான் மூலம் புதிய லேப்டாப் ஆர்டர் செய்ய வேண்டும். அந்த ஆர்டர் எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த எண்ணை கீழே உள்ள லேப்டாப் எக்ஸ்சேஞ் பக்கத்தில் கொடுத்தால் விலை மற்றும் வந்து பெற்றுக் கொள்ள வேண்டிய தேதியைக் கேட்பார்கள்.

பார்க்க: அமேசான் லேப்டாப் எக்ஸ்சேஞ் சலுகை

பழைய லேப்டாப்பை பெறும் தினமன்று சோதித்து பார்த்த பிறகு அதற்கான பணத்தை உடனடியாக கொடுப்பார்கள்.

இந்த சலுகையை ஜூன் 30, 2015 வரை தான் வழங்கி உள்ளார்கள்.

இது ஒரு தகவல் தான். ப்ளிப்கார்ட்டை ஒப்பிடும் போது நல்ல டீலாக தெரிந்தது. மேலும் விவரங்களை சரி பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பார்க்க: அமேசான் லேப்டாப் விலை விவரங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்:
மைக்ரோமேக்ஸ் வழங்கும் டூ இன் ஒன் பட்ஜெட் விலை லேப்டேப்
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக