செவ்வாய், 30 ஜூன், 2015

மே மாதத்தில் நல்ல வளர்ச்சி கண்ட தொழில் துறை

இந்த செய்தி பங்குச்சந்தையில் முதலீடு செய்து இருப்பவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும்.


கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தை சரிவுகளுக்கு பருவமழை  குறைவை அடுத்து தொழில்துறை வளர்ச்சி தான் சந்தேகமாக பார்க்கப்பட்டது. கடந்த காலாண்டில் பல நிறுவனங்கள் பொய்த்த நிதி அறிக்கைகள் கொடுக்க போய் வந்த சந்தேகம் இது.



இது போக, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொழில் துறை வளர்ச்சி தரவுகள் எதிர்மறையிலே சென்று இருந்தன. இதனால் சந்தேகப்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணத்தை பெரிய அளவில் எடுத்து சென்று விட்டனர். இன்னும் சந்தையானது DII என்று சொல்லப்படும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மூலம் தான் தாங்கி பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மே மாத தொழில் துறை வளர்ச்சிகள் ஆறு மாதங்களில் இல்லாதவாறு நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. மொத்தமாக 4.4% வளர்ச்சி கண்டுள்ளது.

இதில்  நிலக்கரி,எரிபொருள் உற்பத்தி, மின்சார உற்பத்தி துறைகள் மிக நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. கிட்டத்தட்ட 7%க்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேல் எந்த வித வளர்ச்சியும் காணாத துறைகளாக இவை இருந்தன. வங்கிகளுக்கு வாராக்கடன்களை வாரி வழங்கியதும் இந்த துறை தான்.

அதனால் இந்த துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி வங்கி உட்பட பல துறைகளுக்கும் பயனாக இருக்க போகிறது. இன்னும் ரியல் எஸ்டேட்டில் தான் பெரிய அளவில் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை.

விவசாயம் தொடர்பான உர உற்பத்தி துறையும் வளர்ச்சி அதிகம் காணவில்லை. பருவமழை பயமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்திய சந்தை தனது மீது சொல்லப்பட்ட எதிர்மறை குறிப்புகளை ஒவ்வொன்றாக சமாளித்து வருவது தற்போது மகிழ்ச்சியான விடயம்.

கிரீஸ் பிரச்சினையால் பல நாடுகளில் சந்தை இறங்கிய போது இந்திய சந்தை தனது வலுவை இழக்காமல் இருந்ததே இதற்கு ஒரு சான்று. அதனால் தற்போதைய சூழ்நிலையில் இறக்கங்கள் வாங்கும் வாய்ப்புகளே!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக