திங்கள், 1 ஜூன், 2015

மே மாதத்தில் நல்ல வளர்ச்சி கண்ட உற்பத்தி துறை

கடந்த வாரம் வெளியான GDP தரவுகளில் உற்பத்தி துறை நல்ல வளர்ச்சி கண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.


GDP தரவுகளை பிரித்து பார்த்தால் உற்பத்தி துறை 7.1% அளவு நல்ல வளர்ச்சி கண்டு இருந்தது. இது கடந்த வருடத்தில் 5.3% அளவே வளர்ச்சி கண்டு இருந்தது.



இந்த நல்ல வளர்ச்சி உற்பத்தி துறையில் இந்த காலாண்டும் தொடர நல்ல வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

Purchasing Managers’ Index (PMI) என்ற அளவுகோல் நிறுவனங்களில் உள்ள உற்பத்தி வளர்ச்சியைக் குறிக்க பயன்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த குறியீடு 51.30 என்று இருந்தது. தற்போது 52.6 என்று வளர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 2% வளர்ச்சி.

இந்த குறியீடு 50க்கும் மேல் இருந்தாலே நல்ல நிலையைக் குறிப்பிடுகிறது என்பது இங்கு முக்கியமானது.

உள்நாட்டில் தேவை மற்றும் வெளிநாடு ஏற்றுமதிகள் அதிகரித்தது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது.

எதிர்மறை செய்திகளால் துவண்டு கிடக்கும் இந்திய சந்தைக்கு இது ஒரு இனிப்பான தரவாகவே அமையும்.

அடுத்து, இன்று RBI வட்டி விகிதங்கள் தொடர்பான தமது முடிவுகளை அறிவிக்க உள்ளார்கள்.

அதனால் சந்தை ஒரு முடிவும் எடுக்காமல் பிளாட்டில் உள்ளது.

நிறைய கருத்துக் கணிப்பு படி, வட்டி விகிதங்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். குறைக்க வாய்ப்பு இருப்பது போலவே தெரிகிறது.

குறைத்தால் சந்தையில் ஒரு நல்ல உயர்வை பார்க்கலாம்.

எமது கட்டண சேவையின் அடுத்த போர்ட்போலியோ ஜூன் 15 அன்று வெளிவருகிறது. விருப்பமுள்ளவர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க..



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக