பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.
பங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ் (ப.ஆ - 42)
நிறுவனங்களின் வளர்ச்சியைக் குறிப்பிடுவதற்கு CAGR என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.
CAGR என்பதன் விரிவாக்கம் Compound Annual Growth Rate என்பதாகும். அதனைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
இது வேறு ஒன்றுமில்லை. நாம் பள்ளிகளில் தனி வட்டி, கூட்டு வட்டி என்று படித்து இருப்போம்.
தனி வட்டியில் வட்டி உடனே பகிர்ந்தளிக்கப்படும்.
ஆனால் கூட்டு வட்டியில் வட்டி என்பது மீண்டும் அசலுடன் சேர்க்கப்படும். அதன் பிறகு வட்டிக்கு வட்டி கிடைக்கும். இந்த கூட்டு வட்டி தான் CAGR என்று அழைக்கபப்டுகிறது.
இதே போல் தான் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் லாபம் கிடைக்கும் போது அதனை அப்படியே டிவிடென்ட் என்று சொல்லி முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில்லை.
அதில் ஒரு சிறு பகுதியை டிவிடென்ட் போல் வழங்கி விட்டு, மீதி பெரும்பகுதியை நிறுவனத்திலே முதலீடு செய்வார்கள்.
அதாவது கிடைத்த லாபம் மீண்டும் முதலீடாக தொடர்கிறது. அந்த முதலீட்டிற்கும் சேர்த்து அடுத்த வருடம் நிறுவனம் லாபத்தை தரும்.
அதனால் வட்டிக்கு வட்டி போன்று இதனை லாபத்திற்கு லாபம் என்று சொல்லலாம்.
இப்படி லாபத்திற்கு லாபத்திற்கு லாபம்..என்று போட்டுக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் நமது முதலீடு பல மடங்காகி விடும்.
அது தான் நமது பங்குகளிலும் எதிரொலித்து இருக்கும்.
விப்ரோவில் 80களில் ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து இருந்தால் தற்போது 43 கோடி ரூபாய் நம்மிடம் இருந்து இருக்கும் என்று ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தோம்.
பார்க்க: விப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி
இப்படி பல மடங்குகள் பெருகுவது என்பது CAGR முறையில் தான் சாத்தியமானது.
இந்த CAGR முறை என்பதை நமது தனி நபர்களுக்கும் பொருந்தும்.
உதாரனத்திற்கு உங்களிடம் 10 லட்ச ரூபாய் இருக்கிறது என்றால் 10 வருடங்களில் ஒரு கோடி ரூபாயாக வேண்டும் என்று நினைக்கீரர்கள்.
அப்படி என்றால் வருடத்திற்கு எவ்வளவு CAGR சதவீத விகிதத்தில் வளர வேண்டும் என்பதை கணக்கிட ஒரு சூத்திரம் உள்ளது.
CAGR = ((ஆரம்ப மதிப்பு /இறுதி மதிப்பு) ^ 1/முதலீட்டுக் காலம்) -1) * 100
இந்த சூத்திரம் கொஞ்சம் கடினமாக இருப்பதால் நமது கால்குலேடர் தளத்தில் CAGR கால்குலேடர் ஒன்றை இணைத்து உள்ளோம்.
பார்க்க:
CAGR Calculator in Stockcalulcation.com
இதில் ஆரம்ப முதலீட்டு மதிப்பை 10 லட்சம் என்றும், இறுதி மதிப்பை ஒரு கோடி என்றும், காலம் 10 வருடங்கள் என்றும் குறிப்பிட்டு கணக்கிடுங்கள்.
அதன் பிறகு உங்கள் ஆண்டு முதலீட்டு CAGR வளர்ச்சி 25% என்று வரும்.
அதாவது உங்கள் 10 லட்ச முதலீடு ஆண்டிற்கு 25% CAGR விகிதத்தில் வளர்ந்தால் 10 வருடங்களில் ஒரு கோடி ரூபாய் ஆகி விடும்.
இது பங்குச்சந்தையில் சாத்தியமான ஒன்றே. இதற்கு 25% வளர்ச்சி அடையும் நிறுவனங்களை தேடித் பிடித்து முதலீடு செய்ய வேண்டும்.
இந்திய பங்குச்சந்தையில் சராசரி நிறுவன வளர்ச்சி 10% அளவும், நல்ல நிறுவனங்கள் வளர்ச்சி 30%க்கும் மேல் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதனால் கடினமான ஒன்று அல்ல.
வாரன் பப்பெட் போன்றவர்கள் பல மடங்குகளில் தங்கள் முதலீடுகளை பெருக்குவது இந்த சூத்திரத்தில் தான்.
எந்தவொரு வளர்ச்சிக்கும் ஒரு அடிப்படை உண்டு என்பதை விளக்க இந்தக் கட்டுரை பயன்படும் என்று நினைக்கிறோம்.
பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.
நிறுவனங்கள் BuyBack முறையில் ஏன் பங்குகளை திரும்பி வாங்குகின்றன? (ப.ஆ - 44)
பயனுள்ள இணைப்பு:

![]() |
10 லட்சம் -> 1 கோடி |

நண்பரே இந்த CAGR பயனை நம் தள நண்பர்கள் அடையவில்லை என உணர்கிறோம். நம் தள பரிந்துரைகள் அனைத்தும் 2 வருட அடிப்படையிலேயே உள்ளது. CAGR பயனடைய குறைந்தது 10 வருடத்திற்கு மேல் முதலீடு செய்தால்தான் அடைய முடியும் என இந்த கட்டுரை வாயிலாக உணர்கிறேன், எனவே மிக நீண்டகால முதலீட்டில் CAGR பயனடைய பரிந்துரைகளை தந்தால் பயனாக இருக்கும்.
பதிலளிநீக்குYes. I agree with chinnapaian raja
பதிலளிநீக்கு