புதன், 10 ஜூன், 2015

பரிந்துரையில் 25% லாபம் கொடுத்த SpiceJet விரிவாக்கம் செய்கிறது

கடந்த டிசம்பரில் Spice Jet நிறுவனம் மாறன்கள் கையில் இருந்தது. மாறன்களுக்கு விமான தொழிலில் சரியான முன் அனுபவம் இல்லாததால் ஒரு கட்டத்தில் கடுமையான நஷ்டங்களை சந்தித்தது.




பல விமானங்கள் ரத்து, எரிபொருள் செலவு கொடுக்க காசில்லை என்றதொரு பரிதாப நிலைக்கும்  SpiceJet சென்றது.

இதனால் மாறன்கள் விட்டால் போதும் என்று நிறுவனர் அஜய் சிங்கிடம் நிறுவனத்தை முழுவதுமாக கொடுத்து கை மாற்றி விட்டனர்.

அந்த சூழ்நிலையில் 15 ரூபாய்க்கு பங்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது.

நமது தளம் மூலம் அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் முதலீடு செய்யலாம் என்று  இந்த பங்கை பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க:

தற்போது நாம் எதிர்பார்த்தவாறே மீண்டும் லாப பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது.

ஏழு காலாண்டுகளுக்கு பிறகு 22 கோடி ரூபாய் லாபத்துடன் கூடிய நிதி அறிக்கையைக் கொடுத்துள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 300 கோடி ரூபாய் நஷ்டத்தைக் காட்டி இருந்தது குறிப்பிட்டத்தக்கது.

உண்மையிலே அஜய் சிங் சாமார்த்திய சாலி தான். குறுகிய காலத்தில் நிறுவனத்தை மீட்டு எடுத்துள்ளார். இன்னும் 800 கோடியை விரிவாக்கதிற்காக முதலீடு செய்ய உள்ளார்.

இந்த காரணங்களால் பங்கும் மேல் எழுந்து 19 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகிக் கொண்டுள்ளது. இது நாம் பரிந்துரை செய்த விலையில் இருந்து 25% அதிகமாகும்.

இன்னும் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய விரும்புவர்கள் கூட இந்த பங்கில் முதலீடு செய்யலாம்.

அடுத்த காலாண்டிற்கு பிறகு தனது விமானங்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, இதனால் நிறுவனத்தின் போக்கு நல்ல திசையில் மாற அதிக வாய்ப்புகள் உள்ளன.

அவ்வாறு நல்ல பலன் பெறுவதற்கு கொஞ்சம் பொறுமையுடன் குறைந்தது இரண்டு வருடங்கள் முதலீடு செய்வது சிறந்தது.

இதே போல் சிறிய, பெரிய பங்குகள் கலந்து தரப்படும் எமது கட்டண போர்ட்போலியோ ஜூன் 13ல் வருகிறது. விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். நாளையுடன் பதிவு செய்தால் தயார் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

இந்த இணைப்பில் மேலும் விவரங்களை பெறலாம்.
 ஜூன் '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக