கடந்த இரு நாட்களாக இந்திய பங்குச்சந்தை எதிர்மறையில் கீழே வந்துள்ளது.
அதற்கு முக்கியமாக கூறப்படும் காரணம் கிரீஸ் பொருளாதார தேக்கத்தால் அங்கு நடைபெறும் பேச்சுவார்த்தைகள் உடன்பாட்டிற்கு வருவதில்லை என்பது தான்.
கிரீஸ் பொருளாதார பிரச்சினையை பற்றி விரிவாக அறிய வேண்டும் என்றால் கீழே உள்ள கட்டுரையை படிக்கவும்.
பார்க்க: வரவுக்கு மேல் செலவால் கிரீஸ் பொருளாதாரம் வீழ்ந்த கதை
கிரீஸ் நாட்டிற்கு உலக வங்கியால் கடன் கொடுக்கப்பட்ட தொகையை வரும் செவ்வாய்க்குள் திருப்பி கொடுக்க வேண்டும்.
அவ்வாறு திருப்பிக் கொடுக்கப்படா விட்டால் நாடு திவாலானதாக அறிவிக்கப்படும். அதன் பிறகு வேறு கடன்களை வாங்குவது என்பது மிகவும் கடினம். இது போக, யூரோ அமைப்பிலிருந்தும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிய நாணயம், புதிய பொருளாதார சூழ்நிலையை உருவாக்குவது என்பது எளிதல்ல.
இதனை கட்டாயம் கிரீஸ் நாடு விரும்பாது.
இது மட்டுமல்லாமல் கிரீஸ் நாட்டு பத்திரங்களில் 90% ஐரோப்பிய நாடுகள் தான் முதலீடு செய்து உள்ளன.
அந்த பத்திரங்களில் முதலீடு செய்யப்பட பணம் திரும்பி வரா விட்டால் அது ஐரோப்பிய நாடுகளை பாதிக்கும். அந்த பாதிப்பு யூரோ நாணயத்திலும் எதிரொலிக்கும்.
இந்த சூழ்நிலையை தவிர்க்க தான் யூரோ நாடுகள் கிரீஸ் நாட்டிற்கு கடன் உதவி கொடுத்து உலக வங்கி கடனை திருப்பிக் கொடுக்க முன் வந்துள்ளன.
இதற்கு தான் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
பென்சன் போன்ற செலவினங்களை கிரீஸ் கடுமையாக குறைக்க வேண்டும். அதே நேரத்தில் அதிக வரி விதித்து வருமானத்தை பெருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் கூறுகின்றன.
அதற்கு உள்நாட்டு எதிர்ப்பு காரணமாக கிரீஸ் உடன்பாட்டிற்கு வர மறுக்கிறது.
ஆனால் அவர்களுக்கு இந்த சூழ்நிலையில் வேறு வழியில்லை என்பது தான் உண்மை. அதனால் இந்த வார இறுதியில் நடை பெறும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
அப்படியே ஒரு கடுமையான நிலையில் உடன்பாடு வராமல் போனாலும் கிரீஸ் நாட்டிற்கும் இந்தியாவிற்கு அவ்வளவு நேரடியாக வர்த்தகம் இல்லை. அதனால் பெருமளவு பாதிப்பு இருக்காது.
ஆனால் யூரோ நாணயத்தில் ஏற்படும் பாதிப்பு இந்திய ஐடி மற்றும் மருந்து நிறுவன பங்குகளில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதற்கான வாய்ப்புகள் என்பது மிகக் குறைவே..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக