புதன், 24 ஜூன், 2015

மாத சம்பளத்தில் PF பிடித்த தொகை உயர்கிறது

மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த கட்டுரை பயனாக இருக்கும்.


தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு வரியை மிச்சம் செய்வதற்காக BASIC சம்பளத்தை குறைத்து மற்றவற்றை அலொவன்ஸ் போல் வழங்கி வந்தன. இதனால் பாதிக்கும் குறைவான சம்பளமே அடிப்படை சம்பளமாக இருந்து வந்தது.





ஆனால் நமது PF தொகை BASIC சம்பளத்தை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது அடிப்படை சம்பளத்தில் 12% மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.


தற்போது மத்திய பணியாளர் அலுவலகம் இந்த முறையை மாற்றி உள்ளது. புதிய கொள்கையின் படி, உங்கள் வீட்டுப்படி, பயணப்படி, பஞ்சப்படி என்று வரும் எல்லா படிகளும் நமது ஊதியமாகவே கருதப்படும். இதன் மொத்த தொகை அடிப்படையிலே PF தொகை கணக்கிடப்படும்.

இதனால் வீட்டுக்கு எடுத்து செல்லும் சம்பளம் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

கீழ் உள்ள அட்டவணையில் ஒரு உதாரண கணக்கீடு உள்ளது.



அதாவது 50,000 சம்பளம் பெறும் ஒருவர் இதற்கு முன்னால் 3,960 ரூபாய் மட்டும் PF கட்டி வந்திருக்கலாம்.

ஆனால் தற்போதைய கணக்கீட்டின் படி, 6,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

மொத்தத்தில் நீங்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் சமபள பணம் இனி 4% குறையும் .அதே நேரத்தில் உங்கள் PF சேமிப்பு பணம் கணிசமாக கூடும்.

ஆனால் நமது வீட்டுக் கடன் போன்றவை வீட்டுக்கு எடுத்து செல்லும் சம்பள பணத்தை அடிப்படையாக வைத்தே தரப்படுவதால் நாம் கடன் பெறும் தொகையின் தகுதி இனி குறையும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக