செவ்வாய், 2 ஜூன், 2015

ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தாலும் கீழிறங்கிய சந்தை

இன்று ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்களுக்கான வட்டியைக் குறைத்தது.


முன்னர் இருந்த 7.5% என்பதில் இருந்து 0.25% குறைத்து தற்போது  7.25% என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால் உங்கள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி கூட குறையலாம்.



இந்திய பங்குச்சந்தையும் இந்த குறைவை எதிர்பார்த்து தான் இருந்தது.

ஆனால் சந்தை மகிழ்வாக எடுக்காமல் எதிர்மறையில் எடுத்துக் கொண்டது ஆச்சர்யம் அளித்தது.

சந்தையின் இந்த தாழ்விற்கு ரிசர்வ் வங்கி எதிர் காலம் குறித்து கூறிய சில கணிப்புகள் காரணமாக அமைந்தது.

கடந்த முறை மழை தேவையில்லாமல் பெய்து வட இந்தியாவில் பயிர்களை அழித்தது.

இந்த முறை தென் இந்தியாவிற்கு தென்மேற்கு பருவக்காற்று மழை சரியான தேதிக்கு வராமல் 10 நாள் தாமதமாகி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வறட்சி அதிகமாகி உணவு பொருள் விலை அதிகரித்து விடும் என்பது ஒரு கணிப்பு.

அடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்பது இன்னொரு குறிப்பு.

சில உலக நிகழ்வுகளும் சாதகமில்லாது அமையலாம் என்பது இறுதி பாயிண்ட்.

இந்த குறிப்புகளை மனதில் வைத்து தான் சந்தையும் கீழ் இறங்கி உள்ளது.

இந்தக் குறிப்புகள் இனி ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்க முயலாது என்றும் கருத்து தருகிறது.

மொத்தத்தில் இந்த வருட இறுதி வரை சந்தையில் பெரிதளவு லாபம் பார்ப்பது என்பது கடினம் என்று தோன்றுகிறது.

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சொல்வது போல் அடுத்த வருட மூன்றாவது காலாண்டில் தான் நல்ல லாபத்திற்கு திரும்பலாம் என்றே தோன்றுகிறது.

அது வரை பொறுமையாக இருப்பது தான் சரியாக இருக்கும்...

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக