வியாழன், 25 ஜூன், 2015

புதிய வருமான வரி படிவங்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?

காலங்காலமாக தொடர்ந்து வந்த கடினமான வருமான வரி படிவங்கள் இந்த நிதி ஆண்டு முதல் மாற்றப்பட்டுள்ளது.

இதில் தேவையில்லாத தகவல்கள் தவிர்க்கப்பட்டு படிவங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் நான்கு படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் நமக்கு வரும் வருமானத்திற்கு ஏற்ப படிவங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த படிவத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

ITR-1 (Sahaj)

கீழ் உள்ள பிரிவில் வருபவர்கள் இந்த படிவத்தை பயன்படுத்தலாம்.
  • தனிநபர் மாத சம்பளம் பெறுபவர்கள், பென்சன் பெறுபவர்கள்,
  • ஒரே ஒரு வீட்டில் மட்டும் வாடகை வருமானம் பெறுபவர்கள்.

ITR-2A

கீழ் உள்ள பிரிவில் வருபவர்கள் இந்த படிவத்தை பயன்படுத்தலாம்.
  • தனிநபர் மாத சம்பளம் பெறுபவர்கள்,, பென்சன் பெறுபவர்கள்,
  • இந்து பிரிக்கப்படாத குடும்ப வருமானம் பெறுபவர்கள், கணவன் மனைவி வருமானம் சேர்த்து பதிவு செய்தல்
  • ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் மூலம் வாடகை வருமானம் பெறுபவர்கள்.

ITR-2

கீழ் உள்ள பிரிவில் வருபவர்கள் இந்த படிவத்தை பயன்படுத்தலாம்.
  • தனிநபர் மாத சம்பளம் பெறுபவர்கள், பென்சன் பெறுபவர்கள்,
  • இந்து பிரிக்கப்படாத குடும்ப வருமானம் பெறுபவர்கள், கணவன் மனைவி வருமானம் சேர்த்து பதிவு செய்தல்
  • ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் மூலம் வாடகை வருமானம் பெறுபவர்கள்.
  • பங்குச்சந்தை போன்றவற்றின் மூலம் Capital Gain வருமானம் பெறுபவர்கள்

ITR-4S  (Sugam)

  • வியாபாரங்கள் மற்றும் சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள்

இந்த படிவங்களை கீழே உள்ள வருமான வரி தளத்தில் பெறலாம்.
http://www.incometaxindia.gov.in/forms/income-tax%20rules/2015/

முன்னர் இருந்தது போல் இனி இணையத்தில் படிவங்களை பதிவு செய்த பிறகு தபால் மூலம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை.

வருமான வரியை எப்படி கணக்கிடுவது என்பது பற்றிய விரிவான பதிவை இங்கு பார்க்கலாம்.
பட்ஜெட்டிற்கு பிறகு வருமான வரி கணக்கிடுவது எப்படி?

« முந்தைய கட்டுரை

Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக