திங்கள், 29 ஜூன், 2015

அரசியல் காரணங்களால் முடிவெடுக்காமல் திணறும் கிரீஸ்

பலரும் கிரீஸ் பொருளாதார சிக்கலுக்காக நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு ஏற்படும் என்று தான் நம்பி இருந்தனர்.


ஆனால் அங்குள்ள அரசியல் நிலவரங்கள் இந்தியாவை விட மோசமாக இருக்கும் போல.



நாம் முந்தைய கட்டுரையில் சொன்னது போல் பொதுவுடைமை சித்தாந்தத்தை கொண்ட மக்கள் காபிடலிசம் மக்களாட்சியை பின்பற்றி வருவதால் ஆட்சியும் மக்கள் எண்ணங்களும் வேறு வேறாக உள்ளது. அதனால் ஓட்டிற்காக ஆளுங்கட்சி முடிவெடுக்காமல் திணறி வருகிறது.

பார்க்க:
வரவுக்கு மேல் செலவால் கிரீஸ் பொருளாதாரம் வீழ்ந்த கதை
எதிர்க்கட்சி கம்யூனிச கொள்கையுடைய கட்சியாக இருப்பதால் அவர்கள் எது செய்தாலும் குறை சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அதனால் தான் என்ன முடிவாக இருந்தாலும் நீங்களே முடிவெடுத்துக்கங்க என்று ஆளுங்கட்சி பொது வாக்கெடுப்பிற்கு விட்டுள்ளது.

ஜூலை ஆறுக்கு முன் நடைபெறும் பொது வாக்கெடுப்பில் மக்கள் எதற்கு ஓட்டுப் போடுகிறார்களா அதுவே இறுதி முடிவாக மாறுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் பொருளாதார சீர்திருந்தங்களை எதிர்க்கும் கிரீஸ் கட்சிகள் கெடு முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் சூழ்நிலையில் மாற்று வழி என்று எதுவுமே யோசிக்கவில்லை.

கூச்சல், குழப்பத்திலே காலத்தை ஓட்டி விடலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள் போல.

கிரீஸ் மக்கள் வங்கிகளில் போட்ட காசு கிடைக்காமல் போகி விடுமோ என்ற பயத்தில் வரிசையில் நின்று ஏடிஎம்களில் பணத்தை எடுத்து வருகின்றனர். அதற்கு 4000 ரூபாய்க்கும் மேல் எடுக்க கூடாது என்று கட்டுப்பாடுகள் வேறு உள்ளது..

யூரோ நாடுகள் இனி உங்க பாடு என்று Plan Bயை நோக்கி சென்றாலும் அவர்களுக்கு சில கவலைகள் இல்லாமல் இல்லை.

ஜெர்மனியும், பிரான்சும் தான் அதிக அளவில் கிரீஸ் நாட்டு பத்திரங்களை வாங்கி வைத்துள்ளன. அதனை யாரிடம் போய் திருப்பி கொடுத்து காசு வாங்குவது என்பதில் குழப்பம் உள்ளது.

இது போக யூரோ வங்கியும் அதிக அளவில் கடனைக் கொடுத்துள்ளது.

இதனால் ஏறபடும் நஷ்டம் யூரோ நாணயத்தை பாதிக்கலாம்.

யூரோ நாணயத்தில் ஏற்படும் பாதிப்புகள் இந்திய சந்தையிலும் பாதிப்பு விளைவுகளை ஏற்படுத்தலாம். இதனால் மென்பொருள், சில ஆட்டோ நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும்.ஆனாலும் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்று நம்பப்படுகிறது.

அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் இருந்து வெளியேறும் முதலீடுகள் இந்தியாவிற்கு மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதனால் கிரீஸ் நாட்டை மையமாக வைத்து சந்தை இறங்கினால் உடனே வாங்கி போடலாம்.

இதனால் தான் நேற்று கிரீஸ் சிக்கலில் சந்தை 600 புள்ளிகள் சரிந்தது. ஆனால் ஒரு நாளிலே பெருமளவு நஷ்டங்களை மீட்டுக் கொண்டது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக