புதன், 3 ஜூன், 2015

பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவிக்கும் ஒரு ரகசிய பேராசிரியர்

இந்திய பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவித்தவர் என்று பார்க்கும் போது ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தான் நினைவுக்கு வருவார்.


ஆனால் அவரையும் தாண்டி சில மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். சிலர் அவர்களாகவே மீடியா என்பதற்குள் வராமல் உள்ளனர்.



அதில் ஒருவர் தான் மாங்கேகர் என்ற கல்லூரி பேராசிரியர். இவரைப் பற்றிய பெரும்பாலான விவரங்கள் யாருக்கும் அவ்வளவாக தெரியாததால் Prof M என்றே சந்கேதத்தில் குறிப்பிடப்படுகிறார்.

இவர் 80களிலே சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தாலும் 2003ல் தான் வெளிச்சத்துக்கு தெரிய வர ஆரம்பித்தார்.


அதுவும் Pantaloons Retail என்ற நிறுவனத்தில் இவர் செய்த முதலீடுகள் 100 மடங்கு ரிடர்ன் கொடுத்த பிறகு தான் யார் இவர் என்று தேட ஆரம்பித்தனர்.

பெங்களூரில் Big bazaar என்ற சூப்பர் மார்கெட் கடைகள் அதிக பிரபலம். அந்த கடைகளை நிர்வகிக்கும் நிறுவனம் தான் Pantaloons Retail .

இந்த நிறுவனத்தின் பங்கு 2003ல் ஒன்பது ரூபாயாக இருக்கும் போது வாங்கினார். அடுத்த ஆறு வருடத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 900 ரூபாயை அடைந்தன.

அதாவது ஒரு லட்சம் முதலீடு செய்து இருந்தால் ஒரு கோடி ரூபாயாக மாறி இருக்கும்.

இத்தனைக்கும் அவர் முதலீடு செய்யும் போது அந்த நிறுவனம் நல்ல கடனில் தான் இயங்கி கொண்டு இருந்தது.

ஆனால் இந்தியாவின் சூப்பர் மார்கெட் வியாபாரத்தின் வளர்ச்சியை மற்றவர்களுக்கு முன்னால் கணிதத்ததால் கணிசமான லாபத்தை பெற்றார்.

இதே போல் Wockhardt நிறுவன பங்குகளை 400 ரூபாய்க்கு வாங்கி 2000 ரூபாய்க்கு விற்றார்.

இப்படி இவரது மடங்கு லாபங்கள் பல வருடங்களாகவே தொடர்ந்துள்ளது.

அவரும் அவரது குடும்பமும் மீடியா என்பது முன் வர மறுப்பதால் அவர் எந்த அடிப்படையை வைத்து முதலீடு செய்கிறார் என்பது இன்னும் புலப்படவில்லை.

இன்னும் சாதாரண மக்களாகவே இவரது குடும்பம் ஒரு இரண்டு பெட் ரூம் பிளாட்டில் குடியிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

கடந்த சில வருடங்களில் United Spirits மற்றும் Financial Technologies நிறுவனங்களில் கணிசமாக பங்கை அதிகரித்து வருகிறார்.

இதில் United Spirits நிறுவனம் விஜய் மல்லையாவின் சொந்த நிறுவனம் என்பது குறிப்பிட்டத்தக்கது. இந்த நிறுவனத்தில் மட்டும் 450 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை வைத்துள்ளார்.

பார்க்க:  விஜய் மல்லையாவின் விளையாட்டு சாம்ராஜ்யம் சரிந்த கதை

Financial Technologies நிறுவனம் NSEL மோசடியில் சிக்கி நொந்து போய் இருக்கும் ஒரு நிறுவனம். அங்கும் முதலீடுகளை ஆரம்பித்துள்ளார்.

இப்படி, இவர் முதலீடு செய்யும் நிறுவனங்களை பார்த்தால் நல்ல அடிபட்டு பங்கு விலைகள் அடிமாட்டு விலைகளில் கிடைக்கும் நிறுவனங்களாகும்.

இதனால் Fundamental Valuation என்பதையும் தாண்டி வியாபரத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது மட்டும் தெரிய வருகிறது.

இவர் முதலீடு செய்து இருக்கும் பிற நிறுவனங்கள் கீழே உள்ள பட்டியலில் உள்ளது.



இது ஒரு உத்தேச சேகரிப்பு தான். முழுமையான பங்கு விவரங்கள் இன்னும் வெளியே தெரியவில்லை.

எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் எப்படியும் இவரது பங்கு முதலீடு ஆயிரம் கோடி ரூபாயைத் தொட்டு விடும் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

பங்குசந்தையில் சாதாரண மனிதர்களும் முதலீடுகளை பெருக்கி கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதற்கு Prof M ஒரு நல்ல சான்று.

நம்பிக்கையுடன் முதலீடுகளைத் தொடருங்கள்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக