வெள்ளி, 5 ஜூன், 2015

500% லாபம் கொடுத்த AEGIS நிறுவனம்

எமது தளத்தில் நவம்பர் 22, 2013 அன்று AEGIS Logistics என்ற நிறுவனத்தை பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க: AEGIS நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்?




இந்த பங்கு இலவச போர்ட்போலியோவின் பகுதியாகவும் இடம் பெற்று இருந்தது.

பார்க்க: முதலீடு போர்ட்போலியோ

நாம் பரிந்துரை செய்த போது இந்த பங்கின் விலை 130 ரூபாயாகத் தான் இருந்தது. தற்போது 730 ரூபாயில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அதாவது லாபம் 561%. கிட்டத்தட்ட 18 மாதங்களில் ஐந்து மடங்கு ரிடர்ன்.

தக்க சமயத்தில் முதலீடு செய்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

பெரிய புள்ளிகள் தான் மடங்குகளில் லாபம் பெறுவார்கள் என்று இல்லை. சிறு முதலீட்டாளர்களும் பங்குச்சந்தையில் அதிக லாபம் பெறலாம் என்பதற்கு பொதுவில் வைத்த இந்த பரிந்துரை ஒரு சான்று.

இந்த பங்கை பொறுத்த வரை பெட்ரோல் பங்கு என்றும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் முழுவதுமாக Logistics பங்கு என்றும் சொல்ல முடியாது. பொறியியல் சார்ந்த ஒரு Logistics பங்காகவே கருதலாம்.

அதனால் இந்தியாவில் அந்த அளவு இந்த துறையில் போட்டி இல்லை. வளர்ந்து வரும் துறை.

இந்த காலாண்டில் 50% க்கும் மேல் லாப வளர்ச்சியை பெற்றுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

அதனால் வீழ்ச்சிகளிலும் கில்லி மாதிரி தற்போது உயர்ந்த நிலையிலே உள்ளது.

அவர்களது பல பெரிய துறைமுக ப்ராஜெக்ட்கள் தற்போது தான் பலன்களை கொடுக்க ஆரம்பித்து உள்ளன. அதனால் இன்னும் சிறிது காலம் இந்த பங்கை வைத்துக் கொள்ளலாம் என்றே நினைக்கிறோம்.

இந்த பங்கு கணிசமான அளவு உயர்ந்து விட்டதால் இதே நிலையில் புதிய முதலீட்டாளர்கள் உள்ளே செல்ல வேண்டாம்.

ஒவ்வொரு பங்கினையும் 10 பங்குகளாக பிரித்து உள்ளார்கள். இதனால் கணிசமான பங்குகள் எண்ணிக்கையில் கூடலாம்.

அதன் பிறகு வேண்டும் என்றால், முதலீடு செய்தவர்கள் ஒரு 20% லாபத்தை உறுதி செய்து கொள்ளலாம். மீதியை அப்படியே வைத்துக் கொள்ளலாம்.

எமது அடுத்த போர்ட்போலியோ ஜூன் 13 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணைப்பில் மேலும் விவரங்களை பெறலாம்.
ஜூன் '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக