திங்கள், 8 ஜூன், 2015

ஓய்வில் கிடைக்கும் Gratuity பற்றிய முக்கிய குறிப்புகள்

தற்போதைய தனியார் மாயா சூழ்நிலையில் யாரும் அதிக காலம் ஒரு நிறுவனத்தில் இருப்பதில்லை என்பதால் Gratuity பற்றிக் கண்டு கொள்வதில்லை.


ஒரு தலைமுறைக்கு முன்னால் சென்று பார்த்தால் Gratuity என்பது ஒரு முக்கிய எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. திருமணம் மற்றும் வீடு கட்டுதல் போன்ற விடயங்களுக்கு அதிக  பயன்பட்டு வந்தது.

இன்று கூட தமிழர்கள் அவ்வளவாக நிறுவனங்களை மாறுவதில்லை என்பது பல நிறுவனங்களில் ஒரு பேச்சாகத் தான் இருக்கிறது.அவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் Gratuity பற்றிய இந்த கட்டுரை பயனாக இருக்கும்.


ஒருவர் ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடங்களுக்கு மேல் வேலை பார்த்தால் அவரது ஊதியத்தின் ஒரு சிறு பகுதியை சேமிப்பாக அந்த நிறுவனம் வழங்க வேண்டும். இதனைத் தான் Gratuity என்று சொல்கிறார்கள்.

இந்த தொகை ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அல்லது வேலையை விட்டு விலகும் போது கொடுக்கப்பட வேண்டும்.

சில சூழ்நிலைகளில் இறப்பு அல்லது ஊனம் போன்றவை ஏற்பட்டால் இந்த ஐந்து ஆண்டுகள் என்ற குறைந்தபட்ச விதி முறைகள் எதுவும் கிடையாது. அதற்கு முன்னரே பணத்தை பெறலாம்.

பத்து ஊழியர்களுக்கு மேல் கொண்டு இருக்கும் எந்த நிறுவனமும் Gratuity கொடுக்க வேண்டும் என்பது முக்கிய விதி. அதனால் கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே Gratuity கொடுத்து தான் ஆக வேண்டும்.

Gratuity கணக்கிடும் பொது  சம்பளத்தின் Basic Pay + Dearness Allowance (DA) என்ற இந்த இரண்டு பகுதிகள் தாம் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

பொதுவாக அரசு ஊழியகள் தவிர மற்றவர்களுக்கு DA வழங்கப்படுவதில்லை என்பதால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் Basicயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு வருடத்திற்கும் 15 நாள் ஊதியம் என்று கணக்கிடப்பட்டு Gratuity தொகை வழங்கப்படும்.

இதனை எளிமைப்படுத்தி Gratuity கணக்கிடுவதற்கு கீழ் உள்ள சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது.

Gratuity = மாத சம்பளம்/26 * 15 * பணி புரிந்த காலம்

இங்கு மாத சம்பளம் என்பது உங்கள்  Basic + DA மட்டும் தான்.

உதாரனத்திற்கு கணேசன் என்பவர் பத்து வருடம் வேலை பார்த்து Basic + DA என்பவற்றை சேர்த்து இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் அவருடைய Gratuity தொகை  கீழே உள்ளவாறு இருக்கும்.

Gratuity = 20,000/26 * 15 * 10 = 115384.

அவருக்கு 1,15,384 ரூபாய் Gratuity பணமாக கிடைக்கும்.

இந்த Gratuity பணம் என்பது நிறுவனம் மூலமாகவே வழங்கப்படுகிறது. அரசிற்கும் இந்த பணத்திற்கும் எந்த வித சம்பந்தமில்லை.

இதனால் நடத்தை சரியில்லாமல் ஒருவர் நிறுவனத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டால் அவருக்கு Gratuity பணம் கிடைக்காமல் போகவும் வழி உண்டு. அதற்கு பல கட்ட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது நமக்கு சாதகமான ஒன்று.

ஒருவர் நிறுவனத்தை விட்டு விலகிய பிறகு முப்பது நாட்களுக்குள் Gratuity பணத்தை நிறுவனங்கள் கொடுத்து விட வேண்டும். பணியாளர் கேட்கா விட்டாலும் கூட அவர்களுக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்பதும் ஒரு விதி.

ஒரு நிறுவனம் எவ்வளவு நஷ்டத்தில் இயங்கினாலும் பணியாளர்களின் Gratuity பணத்தை முதலில் செட்டில் செய்ய வேண்டும். தட்டிக் கழிக்க முடியாது.

அது போல் எவ்வளவு அதிகமாக சம்பளம் வாங்கினாலும் அதிகபட்சம் பத்து லட்சத்தை மட்டுமே Gratuity பணமாக பெற முடியும்.

Gratuity மூலம் கிடைக்கப்பெறும் பணதிற்கு வரி விலக்கும் உண்டு என்பது கூடுதல் ஒரு சலுகை.

ஒரு நிறுவனத்தை விட்டு விலகும் போது ரூல்ஸ் பேசியே சில பைனான்ஸ் டிபார்ட்மென்ட் நபர்கள் ஏமாற்றுவார்கள்.

அவர்களை சமாளிப்பதற்கு நாமும் இந்த விதி முறைகளை தெரிந்து வைத்துக் கொண்டால் அதிக அளவில் பயன்படும்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. அருமையான பதிவு. இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வு பெறவுள்ள என்னைப் போன்றவர்களுக்கு பயனுள்ள பதிவு. என்ன சார் இன்னும் sun tv ஐ பற்றிய பதிவை காணோமே.....?????? எழுதிக்கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.....!!!!!!!

    பதிலளிநீக்கு