செவ்வாய், 30 ஜூன், 2015

மூன்றாவது வருடத்தில் முதலீடு தளம் ...

நாட்கள் செல்லும் வேகத்தில் நமது முதலீடு தளம் இரண்டு வருடங்கள் நிறைவு செய்து நாளை மூன்றாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது.


சினிமாவும், அரசியலும் அதிகம் கலந்த தமிழ் இணையத்தில் ஒரு தனிப்பட்ட பொருளாதார பதிவு தளமாக தான் முதலீடு ஆரம்பிக்கப்பட்டது.



பலவித பிரச்சினைகளால் நாளிதழ் தளங்களை தாண்டி எந்தவொரு தமிழ் தளமும் அதிக நாள் நிலைத்து நிற்பதில்லை. அதனால் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு வருடம் கூட தாங்குமா என்றதொரு அவநம்பிக்கை எமக்கு இருந்து வந்தது.

ஆனால் வாசகர்களாகிய எமது நண்பர்கள் தூண்டுதலால் இன்று ஐந்து லட்சம் பக்க பார்வையாளர்களை கடந்துள்ளது.

எப்பொழுதாவது எழுதலாம் என்று தான் ஆரம்பித்தோம்.ஆனால் இன்று அன்றாட கடமையாக மாறிப் போனது ஆச்சர்யமாக உள்ளது. நன்றி நண்பர்களே!

இப்பொழுது சமூகத்திடம் பெற்றவற்றின் ஒரு பகுதியை திருப்பிக் கொடுக்கும் தருணம். அதனால் சில சலுகை மற்றும் உதவிகளை பகிர்கிறோம்.

வாசகர்களுக்கு வருடாந்திர சலுகை:


முதலீடு தளத்தின் வருடாந்திர நிகழ்வையொட்டி எமது அணைத்து கட்டண சேவைகளுக்கும் 15% சலுகை வழங்குகிறோம். ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை  இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கீழே புதிய கட்டண விவரங்கள் உள்ளன.
  • முழு போர்ட்போலியோ : 1200 => 1020 ரூபாய்
  • மினி போர்ட்போலியோ : 650 => 550 ரூபாய்.
  • ஒரு பங்கு பரிந்துரை: 200 => 170 ரூபாய்.
  • 3 ம்யூச்சல் பண்ட் பரிந்துரை: 500 => 425 ரூபாய்.

முதலீடு சமூக உதவி:

எமது தள  கட்டண சேவைகள் மூலம் கிடைத்த வருமானத்தில் 5%  பகுதியை சமூக உதவி  அல்லது இணைய தமிழ் வளர்ச்சி போன்றவற்றிற்கு கொடுப்பதாக கூறி  இருந்தோம்.

அதன்படி கடந்த வருடம் ஆப்ரிக்காவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது தனிப்பட்ட பங்கையும் சேர்த்து 6000 ரூபாய் நன்கொடை கொடுத்து இருந்தோம்.

பார்க்க:
முதலீடு சமூக உதவி: 'எபோலா' ஆப்ரிக்கா நாடுகளுக்கு செல்கிறது
அதே போல் இந்த வருடம் முதலீடு தளத்தின் சார்பாக 7592 ரூபாய் ஏதேனும் சமூக உதவிக்கு வழங்கப்படும். விவரங்களை பின்னர் பொதுவில் வைக்கிறோம்.

அடுத்து, நமது தளம் என்ன நிலையில் வளர்ந்துள்ளது என்பதை அறிய பின்வரும் தகவல்களை பகிர்கிறோம்.

பார்வையாளர்கள்:

முதல் வருடத்தில் 1,75,000 முறை பக்கங்கள் பார்வையிடப்பட்டு இருந்தன.
இரண்டாவது வருடத்தில் 3,30,000 முறை பக்கங்கள் பார்வையிடப்பட்டு இருந்தன. (+188% வளர்ச்சி).

கட்டுரைகள்:

கடந்த வருடத்தில் 262 கட்டுரைகள் எழுதப்பட்டு இருந்தன.
இந்த வருடத்தில் 344 கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. (+31% வளர்ச்சி)

தளத்தினை பின் தொடர்பவர்கள்:

இது வரை 17,000 நண்பர்கள் Facebook, Twitter, Email, Google+ போன்றவற்றில் தொடர்கிறார்கள்.

போர்ட்போலியோ செயல்திறன்: 

இது வரை 14 போர்ட்போலியோக்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.

இதில்,
ஒரு போர்ட்போலியோ  +200% வளர்ச்சியும்,
ஒரு போர்ட்போலியோ  +100% வளர்ச்சியும்,
ஒரு போர்ட்போலியோ  +50% வளர்ச்சியும்,
இரண்டு போர்ட்போலியோக்கள்  +30% வளர்ச்சியும்,
இரண்டு போர்ட்போலியோக்கள்  +10% வளர்ச்சியும்,
இரண்டு போர்ட்போலியோக்கள்  +5% வளர்ச்சியும்,
ஒரு போர்ட்போலியோ  +3% வளர்ச்சியும்,
இரண்டு போர்ட்போலியோக்கள்  +1% வளர்ச்சியும் அடைந்துள்ளன.
இரண்டு போர்ட்போலியோக்கள் -5% அளவு எதிர்மறையில் செல்கிறது.

மொத்தத்தில் 14 போர்ட்போலியோக்களில் 12 போர்ட்போலியோ நேர்மறையிலும், 2 எதிர்மறையிலும் செல்கின்றது. 

இந்த வருடத்தில் மென்பொருள் புத்தகங்களை வெளியிடுவதாக உறுதி அளித்து இருந்தோம். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் முடியாமல் போய் விட்டது. இந்த வருடத்தில் அதனை நிவர்த்தி செய்கிறோம்.!

பார்க்க:
முதலீடு மென் புத்தகங்கள் தொடர்பாக அறிவிப்பு
இறுதியாக,
பல வகையில் திரட்டப்பட்ட தகவல்களையும், சொந்த அனுபவங்களையும் அடிப்படையாக வைத்து சொல்கிறோம். இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்து தமிழ் தான் இணைய பயன்பாட்டில் முன்னணியில் உள்ளது. கூகிள் போன்ற நிறுவனங்கள் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளன.

அதனால் நீங்கள் சிறந்து விளங்கும் துறை சார்ந்த தகவல்களை தமிழ் இணையத்தில் பதிவு ஏற்றுங்கள்! அது எழுதுபவர்களுக்கும் எதிர்காலத்தில் நிதிப்பயன் தரும்.

அதே நேரத்தில் தமிழில் கொடுக்கவிருக்கும் புதிய தகவல்கள் நாம் பிந்தைய சந்தியினருக்கு கொடுக்கவிருக்கும் மதிப்பில்லாத பெட்டகங்களாக இருக்கும். புதிதாக நிறைய கணினி, ஆட்டோமொபைல் சார்ந்த இணைய தளங்கள் தமிழில் வருவது மகிழ்வைத் தருகிறது.

இது வரை நாம் கொடுத்த கட்டுரைகள் முடிந்த அளவு  பயனுடையதாக இருந்து இருக்கும் என்று நம்புகிறோம். இனி வரும் காலங்களில் மேலும் மெருகேற்றி சேவையை தொடர்கிறோம்.

இதே ஆதரவை நண்பர்கள் தொடர வேண்டுகிறோம்!

நன்றியுடன்,
முதலீடு

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக