செவ்வாய், 2 ஜூன், 2015

கடனுக்கான வட்டியைக் குறைத்த வங்கிகள்

நேற்று RBI வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியைக் குறைத்தது.


அதனால் வங்கிகளும் நமக்கு தரும் கடன்களுக்கான வட்டியைக் குறைக்கும் வாய்ப்புகள் இருப்பது பற்றி கூறி இருந்தோம்.

பார்க்க:  ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தாலும் கீழிறங்கிய சந்தை




இதன் தொடர்ச்சியாக நேற்று இரவே சில வங்கிகள் தங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து விட்டன.


SBI வங்கி தமது வட்டியை 0.15% குறைத்துள்ளது. இதனால் Base Rate என்பது 9.85% என்பதாக இருக்கும்.

அலஹாபாத் வங்கி 0.30% வட்டியைக் குறைத்துள்ளது. இங்கு Base Rate என்பது 9.95% என்பதாக இருக்கும்.

இதே போல் Dena Bank மற்றும் Punjab & Sind Bank போன்றவையும் 0.25% அளவு வட்டியைக் குறைத்துள்ளன.

இந்த வட்டிக் குறைப்பால் வீட்டுக் கடன், வாகன கடன் பெறுபவர்கள் அதிக அளவு பலன் பெறுவார்கள். Fixed Rate முறையில் கடன் பெறுபவர்கள் Floating Rate முறைக்கு மாறுவதும் நல்லது.

அதே நேரத்தில் நாம் வங்கியில் செய்யும் டெபாசிட்களுக்கும் இனி வட்டி குறையலாம்.

இதனால் அதிக ரிடர்ன் தரும் முதலீடுகளிலும் பணத்தைப் போட்டு வைப்பது நல்லது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. நண்பரே.... சில நாட்களாக நம் தளத்தில் சிறு பிழைகள் ஏற்பட்டுள்ளது....
    தளத்தின் முகப்பு பகுதியில் தினந்தோறும் upload செய்யும் கட்டுரைகள் வரும். சமீப நாட்களாக அந்த பகுதியில் வரவில்லை. மேலும் அண்மை கட்டுரைகள் பகுதியிலும் வரவில்லை. மாறாக "அண்மைய" கட்டுரைகள் என்ற பகுதியில் வருகிறது. இதனால் mobile பதிப்பில் கட்டுரைகள் வருவதில்லை.... சரி செய்யவும்....நன்றி

    பதிலளிநீக்கு