புதன், 10 ஜூன், 2015

சர்க்கரை நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடன், போதுமா?

அரசு சர்க்கரை நிறுவனங்கள் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்கள் வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளது.


இதன்படி, 6000 கோடி அளவு கடன் தொகை சர்க்கரை துறைக்கு வழங்கப்படும்.இந்தக் கடன் வங்கிகள் மூலம் வழங்கப்படும். முதல் ஒரு வருடத்திற்கு வட்டி கட்ட வேண்டிய தேவையில்லை. அதன் பிறகு வட்டி கட்ட வேண்டும்.

இந்த முதல் ஒரு வருடத்திற்கான வட்டியை அரசு வங்கிகளுக்கு வழங்கும்.

இதனால் சர்க்கரை நிறுவன பங்குகள் 10% அளவு உயர்வை கண்டன.

ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு 25 முதல் 28 ரூபாய் வரை ஆகிறது. ஆனால் அரசு நிர்ணயித்த தொகை ஒரு கிலோவிற்கு 22 முதல் 25 ரூபாய் தான்.

இதனாலே சர்க்கரை நிறுவனங்கள் நீண்ட காலமாக நலிவில் தான் இயங்கி வருகின்றன.

இது போக, பருவமழை குறைபாட்டால் கரும்பு விவசாயத்திற்கு தேவையான அதிகப்படியான நீர் தேவைக்கும் பற்றாக்குறை வர வாய்ப்பு உள்ளது.

இதனால் இந்த வட்டியில்லாக் கடன் நீண்ட காலத்திற்கு பெருமளவு உதவாது.

சர்க்கரை விலையை கூட்டி கொடுப்பது தான் விவசாயிகளுக்கும் நிறுவனங்களுக்கும் நீண்ட கால நோக்கில் பயனாக இருக்கும்.

இதனால் சர்க்கரை பங்குகளை வாங்குவதற்கு முந்த வேண்டாம்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: