திங்கள், 1 ஜூன், 2015

தட்டச்சு தெரிந்தால் இந்திய அரசின் பகுதி நேர வேலை வாய்ப்பு

இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின் கீழ் ஒரு வரவேற்கத்தக்க அறிவிப்பு வந்துள்ளது.


இதன்படி, கணிப்பொறி தட்டச்சு செய்யத் தெரிபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு காத்து இருக்கிறது.இவ்வளவு நாள் காகிதத்தில் எழுதி குவிந்து கிடக்கும் அரசு ஆவணங்கள் டிஜிட்டல் வடிவத்தில் மாற்றப்படுகின்றன. அதாவது காகித ஆவணங்கள் ஸ்கேன் செய்து பிடிஎப் போன்ற கணினி ஆவணங்களாக மாற்றப்பட உள்ளன.

இது வரை இந்த மாதிரி வேலைகளுக்கு தனிப்பட்ட அரசு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அல்லது வேறு நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்து தரப்பட்டு இருந்தது.

பங்குச்சந்தையில் இருக்கும் RS Software போன்ற நிறுவனங்கள் கூட இந்த மாதிரி வேலைகளையே செய்து வந்தன.

தற்போது இந்த வேலையை அரசு Freelancers முறையில் நாட்டுக் குடிமக்களுக்கு இந்த வேலையை பகிர உள்ளது.

Freelancers என்றால் செய்கிற வேலைக்கு மட்டும் காண்ட்ராக்ட் முறையில் ஊதியம் கொடுப்பது.  freelancers.com போன்ற தளங்கள் இதில் ஏற்கனவே பிரபலமானவை.

இந்த திட்டத்தால் அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் கொடுக்க வேண்டிய தேவையில்லை. செலவு மிச்சமாகும். பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுத்தது போலும் ஆகும்.

இதில் ஆவணங்களின் ரகசியத்தன்மை கருதி ஒவ்வொரு ஆவணத்தில் சில பகுதிகள் மட்டுமே ஒருவருக்கு வழங்கபப்டும்.

சரிபார்ப்பதற்காக வித்தியாசமான முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஒரே வேலை இருவருக்கு தரப்படும். அதன் பிறகு இருவரது வேலைகளும் கணியில் தானியங்கியாக ஒப்பீடு செய்யப்படும். தவறுகள் இருந்தால் கணினி கண்டுபிடித்துக் கொடுக்கும்.

இதற்காக Digital India Platform என்ற ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளார்கள். அதில் பதிவு செய்வதற்கு ஆதார் எண்  கட்டாயம் தேவை.

இது முழு நேர வேலை பார்க்க இயலாத பெண்கள், வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு அதிக அளவில் பயனைக் கொடுக்கும்.

இந்த திட்டம் இன்னும் செயலாக்கம் பெறவில்லை. அடுத்தக்கட்ட அறிவிப்புகள் வரும் போது தளத்தில் பதிவிடுகிறோம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக