திங்கள், 1 ஜூன், 2015

ஐந்து லட்ச ரூபாய் தேவைக்கும் பங்குச்சந்தையில் நிதி திரட்டலாம்

சிறிய நிறுவனங்களும் பங்குச்சந்தையில் நிதி திரட்டும் பொருட்டு செபி சில ஏற்பாடுகளை செய்து இருந்தது. இதற்கு Alternative Capital Raising Platform என்று பெயர் கொடுத்து இருந்தார்கள்.


இதனைப் பற்றி மிக விரிவாக இங்கு எழுதி இருந்தோம்.
இனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டலாம்



அதன் பிறகு இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள் இந்த அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு சில முக்கியமான மாற்றங்கள் இந்த நிதி திரட்டலில் செய்யப்பட்டு இருந்தன.


முந்தைய முடிவுகள் படி, இந்த அமைப்பு மூலம் நிதி திரட்ட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் நமது நிறுவனத்தின் மதிப்பு பத்து லட்சமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது நிறுவனத்தின் மதிப்பு ஐந்து லட்சமாக இருந்தால் போதும் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முன்னர், பங்குச்சந்தையில் கொடுக்கும் பங்குகளின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது.

தற்போது இது மூன்று லட்ச ரூபாயாக இருந்தால் போதும் என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இறுதியாக நிறுவனர்களிடம் இருக்கும் பங்குகளை மூன்று வருடத்திற்கு எதுவும் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டு இருந்தது. இதனை Lock-in Period என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

தற்போது Lock-in Period என்று எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.

மொத்தத்தில், பல விதிகள் எளிதாக்கப்பட்டு உள்ளன.  இது சுயதொழில் துவங்கும் நபர்களுக்கு பெரிதும் உதவும்.

இன்னும் இந்த திட்டம் செயலாக்கம் பெறவில்லை.

ஆனால் ஐடியாவை யோசித்து நம்மை தயாராக வைத்துக் கொண்டால் சரியான நேரத்தில் முதலீடுகளை பெறலாம்.

இதெல்லாம் நமது முந்தைய தலைமுறைக்கு கிடைக்காத வாய்ப்பு.

இனி வேலை கிடைக்க வில்லை என்று மற்றவர்களை குறை கூறுவதை தவிர்த்து நாமே பல வேலைகளை உருவாக்க இந்த பிளாட்பாரம் ஒரு நல்ல வழியாக இருக்கும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக