செவ்வாய், 9 ஜூன், 2015

பப்பெட் பொன்மொழிக்குள் மலிவாக வரும் Nestle பங்கு

கடந்த இரு வாரங்களாக Nestle பங்கு சந்தையில் துவைத்து எடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 25% வீழ்ச்சி அடைந்துள்ளது.


ஆனால் இரு வாரங்களுக்கு முன் பார்த்தால் நல்ல நிதி அறிக்கை கொடுத்து பலரது தேர்வாகவும் இருந்தது.அதிலும் கிடைக்கும் லாபத்தில் பாதியை அப்படியே டிவிடென்ட் கொடுக்கும் வழக்கமுள்ள ஒரு நிறுவனம் தான் Nestle.

அதனால் நிறுவனத்தைப் பற்றியும், அதன் நிர்வாகத்தையும் அவ்வளவு விமர்சனம் செய்ய முடியாத நிலைமை தான் இருந்து வந்தது.

ஆனாலும் மேகி ப்ராண்டிற்கு ஏற்பட்ட அரசியல் பிரச்சினையை நிர்வாகம் சமாளிக்க முடியாமல் திணறியது.

பார்க்க: மேகியில் உப்பு அதிகம், தவிர்க்க வேண்டிய NESTLE பங்கு

ஒரு வேளை Nestle அமெரிக்க நிறுவனமாக இருந்து இருந்தால் அரசியல் அழுத்தங்களில் நிறுவனம் சமாளித்து இருக்கும்.

ஆனால் நெதர்லாந்தை சார்ந்த நிறுவனம் இந்திய அரசியல் சூழ்நிலைகளில் தடுமாறுகிறது என்பது உண்மை தான்.

இந்த சூழ்நிலையில் வாரன் பப்பெட்டின் ஒரு பொன்மொழியை சொல்கிறோம். அது Nestle நிறுவனத்திற்கு தற்போது நல்ல பொருந்தும்.

"Great investment opportunities come around when excellent companies are surrounded by unusual circumstances that cause the stock to be mis-appraised"
~ Warren Buffet

அதாவது,
"ஒரு நல்ல நிறுவனம் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வீழ்ந்து கிடந்தால் அது தான் நமக்கு வாங்க கூடிய சந்தர்ப்பம்" என்று சொல்லி இருப்பார்.

இது தான் Nestle நிறுவனத்தின் தற்போதைய நிலை.

Nestle என்ற நிறுவனம் வீழவில்லை. நிறுவனத்தின் ஒரு பிராண்ட் தான் அடி வாங்கி உள்ளது.

முன்பு KitKat சாக்லேட்களுக்கு இதே போல் பிரச்சினை வந்த பிறகும் சில ஆண்டுகளில் மீண்டும் அந்த பிராண்டை முதல் இடத்திற்கு கொண்டு வந்தார்கள்.

இதே நிலை மேகிக்கும் வர வாய்ப்பில்லை என்று கூற முடியாது.

நேற்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்தால் நச்சு பொருட்கள் இல்லை என்று சான்றளிக்கப்பட்டதால் Nestle பங்கு 5% உயர்வை கண்டுள்ளது.

இதே போல் ஏதேனும் சாதகமான முடிவுகள் வரும் பட்சத்தில் மீண்டும் சில உயர்வுகளைக் காண வாய்ப்புள்ளது.

P/E மதிப்பு 69க்கு பக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த இந்த பங்கு தற்போது 45க்கு பக்கத்தில் வந்துள்ளது. அதனால் மலிவு விலையை எட்டி உள்ளது.

அடுத்த ஒரு வருடத்திற்கு எக்கச்சக்க விளம்பரங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதால் நிதி அறிக்கையில் சில பிரச்சனைகள் இருக்கலாம்.

ஆனால் அதன் பிறகு நலல் நிலைக்கு திரும்புமாயின் Nestle பங்கு ஒரு பென்னி பங்கை போல் நல்ல ரிடர்னை கொடுக்கலாம்.இதனால் பென்னி ஸ்டாக் அளவு ரிஸ்க் எடுப்பவர்கள் இந்த பங்கை 5500 ரூபாய்க்கு கீழ் வாங்கலாம். மூன்று வருடங்களில் நல்ல சூழ்நிலைகள் இருந்தால் நல்ல ரிடர்ன் கிடைக்கும்.

இல்லை. நச்சு கலந்த உணவை விற்கும் இந்த நிறுவனத்தை ஏன் வாங்க வேண்டும் என்று Social Responsibility அடிப்படையில் முடிவு எடுப்பதாக இருந்தால் இந்த பங்கை வாங்க வேண்டாம்.

பார்க்க: பங்குச்சந்தையில் சமூக அக்கறையுடன் தவிர்க்க வேண்டிய பங்குகள்

குறிப்பு: தனிப்பட்ட முறையில் Nestle வாங்கும் விருப்பமில்லை. ஒரு முதலீட்டாளனாக மேல் உள்ள நேர்மறை கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

எமது அடுத்த கட்டண போர்ட்போலியோ ஜூன் 13 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணைப்பில் மேலும் விவரங்களை பெறலாம்.
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக