தமிழில் ஆய்வு கட்டுரை தொடர்பான புத்தகங்கள் அவ்வளவாக வெளிவரவில்லை என்ற குறையை நீக்கிய ஒரு புத்தகம் "குமரி நில நீட்சி " என்று சொல்ல முடியும்.
ப்ளைட்டில் பயணிக்கும் போது செல்லும் பாதையை குறிப்பிடுவதற்காக ஒரு மேப் டிவியில் காட்டுவார்கள்.
அது சாட்டிலைட் மேப் என்பதால் வரைபடங்கள் இயற்கையானதாகவும் நேர்த்தியாக இருக்கும். அந்த மேப்பில் கடலின் ஆழ விவரங்கள் கூட வெவ்வேறு நிறங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்த நிறத்தை அடிப்படையாக வைத்து பார்த்தால் கடல் வழியாக தமிழ்நாடு ஒரு பாதையில் ஆஸ்திரேலியாவையும், ஆப்ரிக்காவையும் இணைத்து இருக்கும்.
அந்த நெடிய நிலப்பரப்பு தான் கடல்கோளில் மூழ்கியுள்ளதாக சொல்கிறார்கள். அதனை லெமூரிய கண்டம் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் இந்த லெமூரிய கண்டம் இது வரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
நாம் சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் குமரி கண்டத்தை அடிப்படையாக வைத்து ஒரு நிலப்பகுதி இருப்பதாக சொல்லி வருகிறோம்.
ஐரோப்பிய அறிஞர்கள் ஆஸ்திரேலியாவிலும், ஆப்ரிக்காவிலும் நம்மைப் போன்ற சில ஒற்றுமைகள் இருந்ததை அடிப்படையாக வைத்து தொடர்பு இருக்கிறது என்று சொல்லி வந்தார்கள்.
"குமரி நில நீட்சி" என்னும் இந்நூலில் ஆசிரியர் ஜெயகரன் பூகோள அறிவியலை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்து உள்ளார்.
குமரியின் தெற்கில் நிலப்பரப்பு இருந்துள்ளது. அது பெரிய கண்ட அளவிலான நிலப்பரப்பு இல்லை. கடலரிப்பால் இழந்த நிலப்பரப்பு. கடலரிப்பிற்கு முன்னால் இலங்கை தமிழகத்துடன் இணைந்து இருந்தது என்று இறுதியில் முடித்துள்ளார்.
அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் ஏற்கும் வகையில் உள்ளன.
அறிவியல் அடிப்படையிலான புத்தகங்களை விரும்புவர்கள் இந்த புத்தகத்தை விரும்பி படிக்கலாம். ஆங்கில புத்தகங்களுக்கான தரம் இந்த புத்தகத்தில் இருக்கிறது.
தமிழில் இது போன்ற புத்தகங்கள் அதிகம் வெளிவர வேண்டும். நமது சந்ததிக்கு கொடுக்கும் அருமையான சொத்துக்கள் என்று கூட சொல்லலாம்.
முதல் பாதி அதிக அளவில் அறிவியல் பகுதியைக் கொண்டிருப்பதால் கொஞ்சம் மெதுவாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பகுதியில் தமிழகம் தொடர்பான நிகழ்வுகள் வரும் போது நன்றாக உள்ளது.
கீழ் உள்ள இணைப்பில் அமேசானில் கிடைக்கிறது. ஆனால் ஒரே ஒரு புத்தகம் தான் ஸ்டாக்கில் உள்ளது. விலை 175 ரூபாய்.
Kumari Nila Neetchi on Amazon

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக