நம்மிடம் இன்சுரன்ஸ் என்று பெறப்படும் பணத்தை தான் LIC பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. இப்படி நம்மிடம் பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை Cairn நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளது.
இது வரை ஒரு Passive முதலீட்டாளரகவே LIC இருந்து வந்தது. அதாவது தாம் முதலீடு செய்யும் நிறுவனங்களின் நிர்வாக முடிவுகளில் தலையிடுவதில்லை.
கடந்த ஆண்டு Cairn நிறுவனத்திடமிருந்து வேதாந்தா குறைந்த வட்டிக்கு 6000 கோடி ரூபாயை கடனாக எடுத்துக் கொண்டது. அப்பொழுது தான் முதல் முதலாக LIC தமது அதிருப்தியை தெரிவித்தது.
ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. கடன் கொடுப்பதற்கு எல்லாம் மைனாரிட்டி பங்குதாரர்களை மதிக்க தேவையில்லை என்பதால் வேதாந்தாவுக்கு எளிதாக போனது.
ஆனால் தற்போது Cairn நிறுவனத்தை வேதாந்தாவுடன் இணைக்க முடிவு செய்து உள்ளது.
இதே போன்ற முடிவுகளுக்கு மைனாரிட்டி பங்குதாரர்களின் மெஜாரிட்டி ஓட்டுகளை கட்டாயம் பெற வேண்டும்.
LIC கையில் 9% பங்குகள் இருப்பதால் மந்திரக்கோல் அவர்கள் கையில் உள்ளது. அவர்கள் நினைத்தால் இணைப்பு முடிவை தோல்வி அடைய செய்ய முடியும்.
அதனால் அணில் அகர்வால் முதல் பலர் LIC அதிகாரிகளை பார்த்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
தற்போது Cairn நிறுவனத்தின் பங்கிற்கு ஒரு வேதாந்தா பங்கும் 7.5% டிவிடென்ட் தருவதாக கூறி உள்ளனர். அதாவது Cairn பங்கின் நிர்ணயிக்கப்பட்ட விலை 195 ரூபாய் அருகில் வருகிறது. அது மிகவும் குறைவு என்று LIC கருத்தை தெரிவித்து உள்ளது.
இதற்கு மேல் Cairn பங்கு நஷ்டம் காண வாய்ப்பு குறைவு.
அதே நேரத்தில் இப்படி நடைபெறும் பஞ்சாயத்தில் வேதாந்தா இன்னும் கொஞ்சம் இறங்கி வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் கொஞ்சம் கூடுதலாக டிவிடென்ட் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இல்லாவிட்டால் இணைப்பு தோல்வி அடையவும் வாய்ப்பு உள்ளது. அதுவும் நல்லது தான். கச்சா எண்ணெய் விலை மீண்டும் கூடினால் Cairn பங்கும் உயரும்.
அதனால் Cairn பங்கை வைத்து இருப்பவர்கள், கொஞ்சம் காத்து இருந்து பங்கை விட்டு வெளியேறலாம்.
இன்னும் நஷ்டப்படுவதற்கு எதுவுமில்லை. வருவதையாவது பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம்!
பார்க்க:
Cairn-Vedanta இணைப்பு மூலம் பகல் நேரக் கொள்ளையில் அணில் அகர்வால்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக