வியாழன், 4 ஜூன், 2015

மழையைக் கண்டு சந்தை அவ்வளவு பயப்பட வேண்டுமா?

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த போதிலும் சந்தை எதிர்மறை விடயங்களை மட்டுமே இது வர எடுத்து வருகிறது.


உண்மையில் பார்த்தால், கடந்த 15 வருடங்களில் பாதிக்கும் மேற்பட்ட வருடங்களில் இந்தியா சராசரிக்கும்  குறைவான அளவு மழையையே பெற்று இருக்கிறது.



என்பதுகளில் வறட்சியினால் அரிசி இல்லாமல் சோளம், மைதா போன்றவற்றை சாப்பிட ஆரம்பித்தார்கள் என்று முன்னவர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கலாம்.

ஆனால் கடந்த சில வருடங்களில் என்பதுகளுக்கு முன்னாள் இருந்த அளவு வறட்சியால் பஞ்சம் வந்ததில்லை. அந்த ஒரு காரணத்தை வைத்து பங்குச்சந்தையும் இறங்கியதில்லை.

பசுமை புரட்சி ஏற்பட்ட பிறகு உணவு கையிருப்பு எப்பொழுதுமே அரசின் கையில் இருந்து வருவதால் பஞ்சம் என்பதில் இருந்து தப்பி விடுகிறோம்.

இந்திய விவசாயம் பல விவசாயிகளின் வாழ்வில் இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை.

ஆனால் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகித்த காலம் கிட்டத்தட்ட போய் விட்டது என்று சொல்லலாம்.

பங்குச்சந்தையை பொறுத்த வரை பருவமழை குறைபாட்டால் உணவு நுகர்வோர் நிறுவனங்கள், சர்க்கரை நிறுவனங்கள் போன்றவை அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. மற்ற நிறுவனங்களில் பாதிப்பு குறைவாக இருக்கும்.

மஞ்சள் காமாலை வந்தவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்று ஒரு பழமொழி உண்டு.

இது தான் பங்குச்சந்தையை பொறுத்த வரை தற்போதைய நிலையில் அழகாக பொருந்துகிறது.

இந்த காலாண்டில் நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவு நிதி முடிவுகளை கொடுக்கவில்லை என்பது தான் ஒரு மிகப்பெரிய குறை.

அதற்கு அது சொத்தை, இது சொத்தை என்று மற்ற பல காரணங்களை தேடிக் கொண்டு சந்தை அலைகிறது. அதில் ஒன்று ராஜன் வாயால் வெளிவந்த பருவமழை வார்த்தைகள்.

பருவமழையால் தற்போது சந்தைகளில் ஏற்பட்ட இறக்கம் என்பது கொஞ்சம் அதிகபட்சமாகவே தெரிகிறது.



நீங்கள் இந்த வருடம் பங்குச்சந்தையில் 20 முதல் 25% வருமானம் எதிர்பார்த்து இருக்கலாம். மழை இல்லாவிட்டால் அதில் இரண்டு சதவீதத்தைக் கழித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் மழைக்காக சந்தையை விட்டு ஒதுங்கி விட வேண்டாம்!

எமது அடுத்த போர்ட்போலியோ ஜூன் 13 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணைப்பில் மேலும் விவரங்களை பெறலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக