ஞாயிறு, 7 ஜூன், 2015

நல்ல நிதி அறிக்கையைக் கொடுத்த DION பங்கு

இதற்கு முன்னால் DION Global Solutions என்ற நிறுவனத்தின் பங்கை பரிந்துரை செய்து இருந்தோம்.


பார்க்க: தில் இருப்பவர்கள் இந்த பங்கில் முதலீடு செய்யலாம்

பரிந்துரை செய்த போது 93 ரூபாயில் இருந்த பங்கு தற்போது 115 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னால் 125 ரூபாய் வரை கூட சென்று இருந்தது. அதாவது பரிந்துரை விலையில் இருந்து கிட்டத்தட்ட 30% உயர்வு.நாம் எதிர்பார்த்தவாறே இந்த காலாண்டில் நிறுவனம் நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு திரும்ப ஆரம்பித்து இருந்தது.

இந்த காலாண்டில் விற்பனை 29% உயர்வும், லாபம் 400% உயர்வும் அடைந்துள்ளது.

வங்கி துறைக்கு தேவையான மென்பொருளை உருவாக்கும் இந்த நிறுவனம் ஒரு அதிக பீட்டா மதிப்புடைய பங்கு. இதனால் மாற்றங்கள் என்பது அதிக அளவு இருக்கும். அதே நேரத்தில் ரிஸ்கும் அதிக அளவு இருக்கும்.

அதனால் அதிக ரிஸ்கையும் அதிக ரிடர்னையும் விரும்புவர்கள் இந்த பங்கில் தற்போதைய நிலையில் தொடரலாம்.

எமது அடுத்த கட்டண போர்ட்போலியோ ஜூன் 13 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணைப்பில் மேலும் விவரங்களை பெறலாம்.« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக