வெள்ளி, 26 ஜூன், 2015

முதலீடு மென் புத்தகங்கள் தொடர்பாக அறிவிப்பு

நண்பர்களுக்கு,

வணக்கம்!

கடந்த ஆண்டு எமது தளம் ஆரம்பிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வையொட்டி எமது தளத்தின் தொடர்களாக வரும் முக்கிய கட்டுரைகளை ஒரு மென் புத்தக வடிவில் தருவதாக சொல்லி இருந்தோம்.



இது தொடர்பாக நண்பர் ராஜா அவர்கள் மின் அஞ்சலில் இவ்வாறு கேட்டு இருந்தார்.

"இன்று நம் தளத்தில் உள்ள பழைய கட்டுரைகளை படித்தேன் . ஆனால் பலரிடம் 2g மொக்கை இணைப்பு இருப்பதால் படிக்க கடினமாக உள்ளது. இந்த கட்டுரைகளை எல்லாம் ஒருங்கிணைத்து pdf file ஆக தரலாமே."

கருத்துக்களை பகிர்ந்த ராஜாவிற்கு நன்றி!

உண்மையில் நாமும் இதனை மறந்து விட முடியவில்லை. ஆனால் அதிக வேலைப்பளு காரணமாக அந்த புத்தகத்தை தொகுக்க முடியவில்லை. இது தவிர இன்னும் கொஞ்சம் கட்டுரைகள் வந்தால் ஒரு முழுமையான புத்தகமாக மாறலாம் என்று நினைத்தோம்.

அதனால் முதல் கட்டமாக எமது "பங்குச்சந்தை ஆரம்பம் தொடர்" ஐம்பது பாகங்களை கடந்த பிறகு அதிலுள்ள கட்டுரைகளை, தொடர்ச்சி தவறாதவாறு தொகுத்து தருகிறோம். (தற்போது 43வது பாகத்தில் நிற்கிறது.)

அதோடு நின்று விடாமல் மற்ற பிரிவுகளில் உள்ள முக்கிய கட்டுரைகளையும் ஒவ்வொரு கால இடைவெளியில் தொகுத்து தருகிறோம்.

இந்த மென் புத்தகங்களை எமது தள கட்டுரைகளை மின் அஞ்சலில் Subscribe செய்தவர்களுக்கு மட்டும் இலவசமாக தருகிறோம்.

அதனால் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி Subscribe செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே Subscribe செய்தவர்கள் மீண்டும் இணைய தேவையில்லை.

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற


தங்கள் ஆதரவை தொடர கேட்டுக் கொள்கிறோம்!

நன்றியுடன்,
முதலீடு



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக