செவ்வாய், 9 ஜூன், 2015

தவறாக புரிந்து அடி வாங்கும் சன் டிவி பங்கு

நேற்று ஒரே நாளில் மட்டும் சன் டிவி பங்கு 30% அளவு சரிந்தது.


இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சன் டிவிக்கு லைசென்ஸ் கொடுக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக வந்த செய்தி முக்கிய பங்கு வகித்தது.ஆனால் இது அதிகாரப்பூர்வமான செய்தி அல்ல. வதந்தி போல் வந்த செய்தி தான்.

உண்மையில் பார்த்தால்  சன் டிவியின் லைசென்ஸ்  2020க்கு அப்புறம் தான் காலாவதியாகிறது. அதன் பிறகு தான் உரிமத்தை புதுப்பிக்க வேண்டி விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது சன் குழுமம் தனது ரேடியோ எப்எம்களுக்கு தான் அனுமதி கேட்டுள்ளது. அதற்கு தான் மாறன்களின் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டு காரணமாக எதிர்ப்பு வந்து இருக்கும் போல் தெரிகிறது.  இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதே தற்போதைய நிலவரம்.

அதுவும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கண்டிப்பாக லைசென்ஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் ராஜ்நாத் சிங் தான் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவர்களுக்குள் என்ன வாய்க்கால் தகராறு என்று தெரியவில்லை.

சன் டிவியின் லைசென்சை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ரத்து செய்வது என்பது கடினமே.

நேற்றே இது தொடர்பாக பதிவு எழுதலாம் என்று தான் நினைத்தோம்.

ஆனால் 30க்கும் மேற்பட்ட  டிவி சானல்களின் உரிமத்தை ஒரே இரவில் ரத்து செய்தது தொடர்பாக சில சந்தேகங்கள் இருந்தன. அதனால் தான் எழுதவில்லை.

இன்று அந்த செய்திகளின் உண்மை நிலவரம் தெரிந்த பிறகு மீண்டும் சன் டிவி பங்குகள் 10% அளவு உயர்வை சந்தித்தன.

தற்போதைக்கு சன் டிவியின் எதிர்காலம் என்பது மாறன்கள் கையிலும் இல்லை. சன் டிவியை பார்ப்பவர் கையிலும் இல்லை. அரசியல் விளையாட்டுக்களின் கையில் தான் உள்ளது.

அதனால் சன் டிவி என்ன தான் ஜொலித்தாலும், என்ன நடக்கிறது என்று புரியாததால் நாம் தூர நின்று வேடிக்கை பார்ப்பது நல்லது!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக