புதன், 10 ஜூன், 2015

டம்மி ஜுன்ஜுன்வாலாவால் ஏற்றி இறக்கப்பட்ட சுரானா பங்கு

நேற்று காலையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சுரானா பங்குகளில் முதலீடு செய்கிறார் என்று ஒரு செய்தி வந்தது.


அதாவது 55 ரூபாயில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த சுரானா சோலார் நிறுவனத்தின் 2.5 லட்சம் பங்குகளை வாங்கி உள்ளார் என்பது தான் செய்தி.அவரே வாங்கி விட்டார், நாமும் வாங்குவோம் என்று பலர் வாங்க அடுத்த சில மணி நேரங்களில் சுரானா பங்கு 10% உயர்வை சந்தித்தது.

அதன் பிறகு மீண்டும் ஒரு செய்தி.

வாங்கியவர் பங்குச்சந்தை ஜாம்பவான் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இல்லை.

பார்க்க: இவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்

அவர் ராஜ்கோட் நகரை சார்ந்தவர். அவர் பெயரும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தான். கடந்த ஒரு மாதமாகத் தான் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

ஆனால் அவர் ஏன் ஆரம்ப கட்டத்திலே ஒரு கோடிக்கு ரூபாய் மேல் வர்த்தகம் செய்தார் என்று தான் புரியவில்லை.

யாராவது இந்த ஐடியாவை தூண்டி விட்டு குறுகிய நேரத்தில் பலன் அடைந்து இருக்கலாம்.

இந்த பெயர் ஒற்றுமையைக் காரணமாக வைத்து அவரை போலி என்றும் சொல்ல முடியாது. அதனால் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாத நிலை.

இப்படி சுரானா பங்குகளில் முதலீடு செய்தவர் பெரும்புள்ளி ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இல்லை என்று தெரிந்தவுடன் அதே பங்கு உச்ச நிலையில் இருந்து 20% சரிவை சந்தித்தது.

செய்தியை நம்பி வாங்கியவர்களுக்கு நஷ்டம் தான்.

ஒட்டு நடக்கும் போது எதிரியை வீழ்த்த அவர் பெயரிலே உள்ள டம்மி ஆட்களை ரெடி பண்ணுவார்கள். அதனால் ஓட்டு சிதறும் என்பது நம்பிக்கை. இந்த பங்குச்சந்தை நிகழ்வையும் கிட்டத்தட்ட ஓட்டெடுப்புக்கு ஒப்பாகவே கருதலாம்.

எப்பொருள் யார் மெய்பொருள் காண்பது அறிவு என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

இதனால் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவே வந்து இந்த பங்கை வாங்குங்கள் என்று கூறினாலும் நமக்கு திருப்தி இருந்தால் மட்டும் தான் வாங்க வேண்டும்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக