வெள்ளி, 25 செப்டம்பர், 2015

25,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புதிய வங்கிகள்

கடந்த வருடம் ஒரு பதிவில் வங்கித் துறை அதிக அளவு வேலை வாய்ப்புகளைக் கொடுக்கும் வாய்ப்புகள் பற்றி எழுதி இருந்தோம். அது நிதர்சனமாகும் வாய்ப்பு கூடி உள்ளது.

பார்க்க: வேலை வாய்ப்புகளை வாரி வழங்கவிருக்கும் வங்கிகள்


தற்போது ரிசர்வ் வங்கி மிக வேகமாக புதிய வங்கிகளுக்கு அனுமதி கொடுப்பதன் மூலம் மிக அதிக அளவு வேலை வாய்ப்புகள் இரண்டாம் நிலை நகரங்களிலும் வர விருக்கின்றன.இந்த வருடத்தில் மட்டும் பந்தன், IDFC என்ற இரண்டு புதிதாக பெரிய வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதே போல் வணிகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு Payment Bank என்று புதிய னுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர டெபாசிட்கள் மற்றும் சிறு கடன்கள் கொடுக்க சிறிய வங்கிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வங்கியும் சராசியாக ஆயிரம் வரை புதிய வேலை வாய்ப்புகளை கொடுக்கும் தேவை உள்ளது.

இதனால் மொத்தமாக 25,000 வங்கி வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.

நமது நாட்டில் இன்னும் நாற்பது சதவீத மக்கள் வங்கி சேவையை பெறாமல் இருப்பதால் இன்னும் புதிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளது.

இந்திய வங்கித் துறை ஒரு மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கும் காலக்கட்டம் என்றும் சொல்லலாம்.

நமது ஊரில் ஐடி. இன்ஜினியரிங் என்ற மோகத்தில் மொத்தமாக போய் சேர்வது வழக்கம்.இனி பிற துறைகளில் இருக்கும் வேலை வாய்ப்புகளை உணர்ந்து படிப்பது நல்லது.

காலம் மாறுவதற்கேற்ப படிப்பை தேர்ந்த்தெடுத்தால் உடனடி வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை பாதுகாப்பும் வளரும் துறைகளில் நன்கு அமைய வாய்ப்புள்ளது.தொடர்புடைய கட்டுரைகள்:

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக