ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஆர்பிஐ வட்டி குறைப்பு எதிர்பார்ப்பிற்கு முன் என்ன செய்வது?

நாளை ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு தொடர்பான கொள்கைகளை வகுக்கும் குழு கூடுகிறது. இதில் செய்யப்படும் மாற்றங்கள் நாளைய சந்தையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.


ஆர்பிஐ எதிர்பார்க்கும் பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. அதே நேரத்தில் வட்டியைக் குறைக்க வேண்டும் என்ற அழுத்தம் அரசு, வங்கிகள் மற்றும் தொழில் துறையில் உள்ளவர்களிடம் இருந்து அதிக அளவில் வந்துள்ளது.இதனால் பெரும்பாலான கருத்துக் கணிப்பு படி வட்டி குறைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு குறைக்கப்பட்டால் நாளைய சந்தையில் குறைந்த பட்சம் 500 புள்ளிகள் உயர்வை எதிர்பார்க்கலாம்.

அதிலும் வங்கித் துறை பங்குகள் நல்ல உயர்வை சந்திக்கலாம். அதே போல் அதிக கடன் சுமையில் இருக்கும் நிறுவனங்கள் அதிக வட்டி கட்டுவது குறையும்.

இதனால் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பவர்கள் இன்றைய தாழ்வு நிலையில் இருக்கும் பங்குகளை பகுதியாவது முதலீடு செய்யலாம்.

அதே நேரத்தில் ஒரு வேளை ரிசர்வ் வங்கி வட்டியைக் கூட்டாவிட்டால் சந்தை ஒரு தாழ்வு நிலையை சந்திக்கும். ஆனால் தற்போது ஏற்கனவே சந்தை கீழே உள்ளது. இதற்கும் கீழே சென்றால் மீண்டும் இதே நிலைக்கு உயர வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் இன்று முதலீடு செய்தால்  நஷ்டம் என்பது இல்லை அல்லது தற்காலிகமே.

குறைந்த பட்சம் கால் சதவீத வட்டியாவது குறைக்கப்படும் என்பது தான் சந்தையின் தற்போதைய எதிர்பார்ப்பு. நாளை பார்க்கலாம்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக